அஇஅதிமுகவின் வருங்காலம் என்ன ?

தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதா ? ஆம். அதிமுகவின் வருங்காலம் என்ன என்பதை தெரிவிக்கும் மாபெரும் கணிப்பு தான் இக்கணிப்பு.

அஇஅதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக அஇஅதிமுக தொண்டர்களிடம் எடுக்கப்பட்டுள்ள மாபெரும் கருத்து கணிப்பு. சில நாட்களாகவே திருமதி. தீபா ஜெயகுமார் - தற்காலிக அஇஅதிமுக நியமன பொதுசெயலாளர் திருமதி. வி.கே சசிகலா நடராஜன் - முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே போட்டி நிலவுவதாக பலராலும் பேசப்பட்டு வருகிறது.

இது தொடர்பாகவும், தீபா ஜெயகுமார் தான் அரசியல் பிரவேசம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்ததை தொடர்ந்தும், இக்கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்டத்திற்கு 6000 அஇஅதிமுக உறுப்பினர்கள் வீதம் 32 மாவட்டங்களுக்கு 1,92,000 அஇஅதிமுக உறுப்பினர்களிடம் எங்கள் அமைப்பினை சேர்ந்த 142 இளைஞர்கள் வீதி வீதியாக வேன்களில் திரிந்து கணிப்புகளை எடுத்து வந்தனர். அந்த கணிப்புகளை பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

முதலில் மொத்த கணிப்புகள் விபரங்களை பார்க்கலாம்.


கேள்வி 1. அஇஅதிமுக பொதுசெயலாளராக வி.கே சசிகலா தேர்வுக்கு ஆதரவு அளிப்பீர்களா ?

ஆதரவு அளிக்கின்றோம் - 32,174 (16.8%)

ஆதரவு அளிக்கவில்லை - 88,015 (45.8%)

இன்னும் முடிவு எடுக்கவில்லை - 71,811 (37.4%)


கேள்வி 2. செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியல் பிரவேசம் செய்தால் வரவேற்பீர்களா ?

வரவேற்கிறேன் - 97,964 (51%)

வரவேற்கமாட்டேன் - 76,548 (39.8%)

கருத்து இல்லை - 17,488 (9.2%)

கேள்வி 3. செல்வி.ஜெ.ஜெயலலிதாவுக்கு பின் யாரை ஏற்பீர்கள் ?

ஓ.பன்னீர்செல்வம் - 63,324 (33%)

சசிகலா நடராஜன் - 32,369 (16.8%)

தீபா ஜெயகுமார் - 96,307 (50.2%)

கேள்வி 4. குடும்ப அரசியலை எதிர்க்கும் அதிமுகவில் சசிகலா - தீபா அணிகளில், எந்த அணி நிலைக்கும் ?

வி.கே. சசிகலா நடராஜன் - 48,716 (25.4)

தீபா ஜெயகுமார் - 1,43,284 (74.6%)

கேள்வி 5. யார் தலைமையில் கட்சி இயங்க விரும்புகிறீர்கள் ?

ஓ.பி.எஸ் - 79,065 (41.2%)

சசிகலா நடராஜன் - 33,479 (17.4%)

தீபா ஜெயகுமார் - 72,151 (37.5%)

இதர - 7,305 (3.9%)

-

இதர பட்டியல்

பன்ருட்டி ராமசந்திரன் - 3619 (1.9%), தம்பிதுரை - 1472 (0.8%), பி.எச் பாண்டியன் - 2207 (1.1%), எடப்பாடி பழனிச்சாமி - 7 (0.1%)


கேள்வி 6. எதிர்காலத்தில் திமுக - அதிமுக பலம் எப்படி இருக்கும் ?

சம பலம் - 92,517 (48.2%)

திமுகவை விட அதிமுக கூடுதல் பலம் பெறும் - 65,109 (33.9%)

அதிமுகவை விட திமுக கூடுதல் பலம் பெறும் - 20,568 (10.7%)

மாற்று ஏற்படும் - 13,806 (7.2%)

கேள்வி 7. உங்கள் நேரடி ஆதரவு யாருக்கு ?

சசிகலா நடராஜன் - 34,175 (17.8%)

தீபா ஜெயகுமார் - 1,25,891 (65.6%)

இதர - 31,934 (16.6)

-

இதர பட்டியல்

ஓ.பன்னீர்செல்வம் - 19752 (10.3%), பி.எச்.பாண்டியன் - 8165 (4.2%), மற்றவர்கள் - 4017 (2.1%)

மாவட்ட வாரியான கணிப்பு நிலவரங்கள் நாளை வெளியிடப்படும்....

© 2017 TNSPIMT, Chetpet, Chennai.
Powered by Webnode
Create your website for free! This website was made with Webnode. Create your own for free today! Get started