ராஜீவ் காந்தி படுகொலை - ஒரு பார்வை !

01/14/2017
ராஜீவ் காந்தி ஆகஸ்ட் 20, 1994-ம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் மகனாக பிறந்தார். அலகாபாத்தில் பிறந்த அவர், சில நாட்களிலேயே லக்னோவிற்கு குடும்ப இடமாற்றம் காரணமாக வந்து சேர்ந்தார். ராஜீவ் 6 வயது பாலகனாக இருக்கும் போது, இந்திரா காந்தி சரியாக 1950-ல் டெல்லிக்கு தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார். பெரோஸ் காந்தியோ, நேருவால் ஆரம்பிக்கப்பட்ட நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கையை கவனித்துக்கொள்ள லக்னோவிலேயே தங்கினார். இந்த சமயத்தில் டெஹ்ராடூனில் உள்ள வெல்ஹாம்ஸ் பள்ளியில் தனது பள்ளி படிப்பை ஆரம்பித்தார் ராஜீவ். 5 வருடங்களுக்கு பின் 1955-ல் பள்ளி மேற்படிப்பிற்காக மிகப்பிரபலமான பிரஸ்டீஜியஸ் டூன் பள்ளியில் இணைந்து கல்வி கற்றார். தன் பள்ளி படிப்பை அவர் முடித்த சமயம், 16 வயதில் தன் தந்தை பெரோஸ் காந்தியை அவர் இழந்தார். இந்த சூழல் எல்லாம் அவரை பாதிக்க கூடாது என்பதற்காக அவர் வெளிநாட்டிற்கு மேற்படிப்பிற்காக இந்திரா காந்தி அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார். ராஜீவ் தனது மேற்படிப்பை ட்ரினிட்டி கல்லூரியில் சேர்ந்து தனது மேற்படிப்பை தொடர்ந்தார். பின் லண்டனில் உள்ள இம்பெரியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தனது அடுத்தக்கட்ட மேற்படிப்பை தொடர்ந்தார். இடையே இடையே விடுமுறை நாட்களில் பறப்பது தொடர்பான கலையையும் ராஜீவ் கற்றுக்கொண்டார். இங்கிலாந்தில் இருந்து திரும்பியவுடன் 1967-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பறப்பது தொடர்பான பயிற்ச்சிகளில் பங்கேற்றார். ஒருகட்டத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் அப்ரென்டிஸாக இணைந்த அவர், இந்திய ரக விமானம் RS-748-னை ஓட்ட தலைமை தாங்கி செயலாற்றியுள்ளார். இந்த சமயத்தில் தான் Italy நாட்டை சேர்ந்த சோனியாவை சந்தித்தார். நட்பாக பழகிய இருவருக்கிடையில், நாளடைவில் காதல் மலர, 1978-ம் ஆண்டு சோனியாவை மணந்தார்.

திருமணம் நடந்து இரண்டாண்டுகள் முடியும் தருவாயில் 1980-ல் ராஜீவ் காந்திக்கு விமான ஓட்டிகளுக்கான தனிப்பட்ட லைசன்ஸ் கொடுக்கப்பட்டது. இந்த லைஸன்ஸை பயன்படுத்தி, ராஜீவும் தனி ரக விமானங்களை ஓட்டி தன் பறக்கும் ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டார். இந்த நேரத்தில் தான் இந்திரா காந்திக்குஉதவியாக அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராஜீவின் சகோதரர் சஞ்சய் காலமானார். அவரது மரணம், ராஜீவ் காந்தியின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது என்றால் அது மிகையாகாது.

அரசியல் மீது தனக்கு நாட்டமே இல்லை என்று பலமுறை கூறியுள்ள ராஜீவ் காந்தி, தன் சகோதரர் சஞ்சய் காந்தியின் மரணத்திற்கு பின், தன் தாய் இந்திராவுக்கு உதவிகரமாக இருக்க அரசியலுக்குள் காலடி வைக்கவேண்டிய சூழல் உருவானது. அரைமனதோடு அரசியலுக்குள் நுழைந்தார் ராஜீவ் காந்தி. இதுபற்றி ராஜீவ் கூறிய சில வரிகள் '' I had no love for politics. I treasured the privacy of my happy family life. My mother respected both these sentiments. Then my brother Sanjay was killed in the prime of his life. It broke a mother's heart . It did break a Prime Minister's will. Without even a day's break of grief, she carried on her task single-minded in fulfilling her pledge to her people. There is a loneliness that only a bereaved mother can know. She called to me in her loneliness. I went to her side. At her instance I left my love for flying and joined her as a political aide. From her I learnt my first political lessons. It was she who urged me to respond to the insistent demand from the constituency and the party to take my brother's place as Member of Parliament for Amethi. With her blessings, I was made General Secretary of my party asking me to accept the challenge of stepping into her shoes. In accepting the challenge, I fulfilled a national duty and a filial duty,: the duty of a son to a mother. ''

1981-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமேதி நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ராஜீவ் காந்தி அமோக வெற்றி பெற்றார். அதன் பிறகு ஆகஸ்ட் 17, 1981-ல் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக அவர் பதவிப்பிரமானம் செய்துக்கொள்ள, தனது முதல் பேச்சை அவர் மார்ச் 11, 1982-ல் மக்களவையில் வழங்கினார். பின் 1982-ல் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் தனது பங்கு இருக்கும் வண்ணம் செயலாற்றினார். அவரது பேச்சுக்கள் மற்றும் அவரின் செயலாற்றும் திறமைகள் காங்., கட்சிக்கு பெரும் செல்வாக்கை ஏற்படுத்தி கொடுக்க, பிப்ரவரி 3, 1983-ல் அகில இந்திய காங்., கட்சியின் பொதுச்செயலாளராக ராஜீவ் காந்தி நியமிக்கப்பட்டார். அதன் பிறகு நடந்த அருனாச்சல பிரதேசம், பீஹார், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து சட்டமன்ற தேர்தல்களுக்கான முழு தலைமை பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டு செயலாற்றினார். இவரின் உத்வேகத்தை கண்ட இந்திரா காந்தி, மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து இளைஞர் காங்., அமைப்பை நிர்வகிக்கும் பொறுப்பையும் ராஜீவ் காந்திக்கே வழங்கினார். அரசியலுக்கே வரும் எண்ணம் இல்லாத ராஜீவ் காந்தி, அரசியலில் கலக்கிக்கொண்டிருந்த நேரத்தில் தான் நாட்டையே ஒரு துயரச்சம்பவம் உலுக்கியது. ஆம், அக்டோபர் 31, 1984-ம் ஆண்டு தன் பாதுகாப்பு அதிகாரி ஒருவராலேயே சுட்டுக்கொள்ளப்பட்டார் இந்திரா காந்தி. நாட்டில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட இது காரணமாக அமைந்துவிட்டது. நம் தமிழகத்திலோ இந்த துயரத்தை அப்போதைய முதலமைச்சரான எம்.ஜி.ராமசந்திரன் அவர்கள் தலைமையிலான அரசு, மத்திய அரசுடன் இணைந்து கடைபிடித்தது. இந்திரா காந்தியின் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த மறைவு, எம்.ஜி.ஆர் - ராஜீவ் காந்தி இடையேயும், ஜெயலலிதா - ராஜீவ் காந்தி இடையேயும் ஒரு நல்ல நட்பை ஏற்படுத்திக்கொடுத்தது. காங்., கொள்கைகள் மீது அதிக நாட்டம் கொண்டவராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள், நாட்டில் கொண்டுவரப்பட்ட அவசர கால நடைமுறைக்கு கூட பகிரங்கமாக ஆதரவு கொடுத்தார் என்றால் அது இந்திராவின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையே காரணமாக இருந்தது.

இந்திராவின் மறைவு, ராஜீவ் காந்தியை அகில இந்திய காங்., கட்சியின் தலைமை பதவிக்கு அழைத்து வந்தது. அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த ராஜீவ் காந்தி, சகோதரரின் மறைவினால் அரசியலுக்குள் நுழைந்து, தாயின் மறைவினால் தலைமை பொறுப்பை எடுத்துக்கொண்டார். நாட்டின் பிரதமர் ஒருவர் இப்படி பகிரங்கமாக கொல்லப்பட்டதும் இந்திய அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருந்தது. காங்., கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்ட ராஜீவ் காந்தி, மூத்த தலைவர்கள், அமைச்சர்களுடன் ஆலோசித்துவிட்டு இடைக்கால பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

1984-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இந்திராவின் மறைவு மக்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதுநாள் வரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மொத்தமுள்ள 508 தொகுதிகளில் 401 தொகுதிகளை ராஜீவ் காந்தி தலைமையிலான காங்., கட்சி கைப்பற்றி ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக்கொண்டது. ராஜீவ் காந்தியோ மீண்டும் மக்களின் அமோக ஆதரவில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனிக்கட்சியாக ஒரு கட்சி 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றியது என்றால் அது காங்., கட்சி மட்டும் தான். இந்திய அரசியல் வரலாற்றிலேயே இன்றைய தினம் வரை எந்த ஒரு கட்சியும் இவ்வளவு தொகுதிகளை கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை இதுவரை எந்த கட்சியாலும் உடைக்கப்படவில்லை.

ராஜீவ் காந்தி நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், மக்களின் அமோக ஆதரவில் வென்று நாட்டின் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமர்ந்தார். ராஜீவ் பிரதமர் பதவியில் அமர்வது இது இரண்டாவது முறை. இந்த காலக்கட்டத்தில் ராஜீவ் காந்தி, பஞ்சாப் - அசாம் - மோசோ கூட்டு திட்டம், இந்தியா - இலங்கை இடையேயான ஒப்பந்தம் போன்றவற்றை மேற்கொண்டார். தேர்தல் நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தினார் ராஜீவ் காந்தி. பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை முதன்முதலில் அமலுக்கு கொண்டுவர முயற்ச்சிகளை மேற்கொண்டார். கடைசியாக பஞ்சாயத் ராஜ் என்ற திட்டத்தை கொண்டுவந்து, அத்திட்டம் மூலம் வாக்களிக்கும் உரிமைக்கான வயது நிர்ணையத்தை 21-ல் இருந்து 18-ஆக குறைத்தார். இது நாடு முழுவதும் பலத்த வரவேற்பை பெற்றது. புதிய கல்விக்கொள்கையை ராஜீவ் காந்தி இந்த காலக்கட்டத்தில் உருவாக்கிக்கொடுத்தார். இக்னோ என்ற இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலை கழகத்தை உருவாக்கி, தொலைநோக்கு கல்வி மற்றும் தொடர் கல்லூரி கல்வியை நாட்டில் அறிமுகப்படுத்தினார். இந்த பல்கலை கழகத்தால், தொடர் கல்லூரிகளில் படிக்க இயலாமல் கல்வியை பாதியிலேயே நிறுத்திய இளைஞர்கள் பலர் மீண்டும் கல்வியை தொடர்ந்தனர். 1988-ம் ஆண்டு மாலதீவு நாட்டிற்கு தேவையான அத்தனை உதவிகளையும் அவசரகால உதவியாக செய்து அண்டை நாட்டு நட்பை புதுப்பித்து, அமைதியான ஆட்சியை நிலைநிறுத்தினார். அதேவேளையில் சார்க் அமைப்பில் இந்தியாவின் நிலையை எடுத்துக்கூறி, மற்ற அண்டை நாடுகளுடனும், சார்க் அமைப்பு நாடுகளுடனும் நட்பை பேணி வந்தார். 1988-ம் ஆண்டு சீனா சென்ற ராஜீவ் காந்தி, இந்தியா - சீனா இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையொப்பமிட்டு, நாட்டிற்கே புதிய உத்வேகத்தை கொடுத்தார். ஒருகட்டத்தில் தனி ஈழம் கோரி போராடிய விடுதலை புலிகள் அமைப்பினரை கூட ராஜீவ் காந்தி, தன் இல்லத்திற்கு அழைத்து பேச்சுவா,ர்த்தை நடத்தினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் விடுதலை புலிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ராஜீவ் காந்தி பகிரங்கமாக அந்த அமைப்பினருக்கு உத்திரவாதம் கொடுத்தார். இவை அனைத்தும் ராஜீவ் காந்தி என்ற தனி மனிதர் மீது மக்களிடத்தில் மரியாதையை உண்டாக்கியது. ஆனால் அகில இந்திய காங்., கட்சிக்கு அது உதவவில்லை.

1989-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்., கட்சி தோற்றது. ஆனால் வி.பி சிங் தலைமையிலான அரசுக்கு தன் தோழமை கட்சிகள் மூலம் ஆதரவு அளித்து வந்ததார் ராஜீவ். 1990-ல் ராஜீவ் காந்தி கண்காணிக்கப்படுகிறார் என்று அவரே பேச, அவர் தரப்பிலான ஆதரவுகள் மத்திய அரசிடமிருந்து பின்வாங்கப்பட்டன. ஒருகட்டத்தில் இந்த குற்றச்சாட்டுகளால் பிரதமர் பதவி விலக, ஆட்சியும் கலைக்கப்பட்டது. இதனால் இடைக்கால பிரதமராக சந்திரசேகர் அவர்கள் பதவியேற்றுக்கொண்டார். அப்போது அவரும் ராஜீவ் காந்தியின் வீட்டை நோட்டமிடுவதாக ராஜீவ் காந்தி குற்றம் சாட்டினார். ஒருகட்டத்தில் 1990-ல் மத்திய அரசு ராஜீவ் காந்திக்கு கொடுத்து வந்த உயர்ரக பாதுகாப்பினை திரும்ப பெற்றது.

இப்படிப்பட்ட சூழலில் தான் 1991-ம் ஆண்டு மே மாதம் இந்தியா நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலை மீண்டும் எதிர்கொண்டது. இம்முறை ராஜீவ் காந்தி தான் பிரதமராக வருவார் என்று மீடியாக்கள், பத்திரிக்கைகள் அவர் மீது வெளிச்சத்தை திருப்ப, நாடே அவரை தேர்ந்தெடுக்கும் என்ற சூழலுக்கு அது கொண்டுச்செல்லப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் தான், திட்டமிடப்படாத, அரசியல் பிரச்சாரத்தில் கலந்துக்கொள்ள சென்னையில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீபெரம்புதூர் என்ற இடத்திற்கு ராஜீவ் காந்தி வந்தார்.

கேரளாவில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு புறப்படும்போது, அவருடன், அவரது பாதுகாவலர் இல்லை. சென்னை வந்ததும், அங்கு அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மற்றொரு பாதுகாவலரிடம், கேரளாவில் இருந்து ராஜீவுடன் வரவேண்டிய பாதுகாவலர் தன்வசம் உள்ள துப்பாக்கியினை ஒப்படைத்தால் மட்டுமே பாதுகாப்பு என்பது சாத்தியம். ஆனால் கேரளாவில் இருந்து மிக தாமதாக ராஜீவின் பாதுகாவலர் புறப்பட்டதால், ராஜீவ் காந்தியுடன் அவரால் பயணிக்க இயலவில்லை. இதனால் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாவலருக்கு, பாதுகாப்பு துப்பாக்கி கொடுக்கப்படவில்லை.

சென்னை வந்து இறங்கிய ராஜீவ் காந்தி, துப்பாக்கி ஏந்தாத பாதுகாவலருடன், ஸ்ரீபெரம்புதூர் புறப்பட்டார். அப்போது அவரை வரவேற்க அவரது பிரதான கூட்டணி கட்சியான அதிமுகவின் தலைவி செல்வி.ஜெ.ஜெயலலிதா, தனது தேர்தல் பிரச்சார திட்ட பயனம் காரணமாக விமான நிலையம் வரவில்லை. ஒருவேளை ஜெயலலிதா வந்திருந்தால், ராஜீவ் காந்திக்கு அஇஅதிமுகவினரின் தனிப்பட்ட பாதுகாப்பு கிடைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

ஒருகட்டத்தில் துப்பாக்கி ஏந்தாத பாதுகாவலருடன் புறப்பட்ட ராஜீவ் காந்தியிடம், தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுக்க அனுமதிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி வழியில் ஒரு இடத்தில், திட்டமிடப்படாத ஸ்ரீபெரம்புதூர் பிரச்சார இறுதிக்கட்ட அவசர திட்டத்தில், குறிக்கப்படாத ஒரு இடத்தில் 100 பேருக்கு மத்தியில் ராஜீவ் காந்தி தனிப்பட்ட முறையில் பேசினார். அதன் பிறகு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு, ஸ்ரீபெரம்புதூர் வரை, தனது வாகனத்திலேயே பத்திரிக்கையாளர்களுடன் இணைந்து பேட்டி அளித்துள்ளார்.

ஸ்ரீபெரம்புதூர் வந்தவுடன், பேட்டியை தற்காலிகமாக முடித்துக்கொள்வதாக தெரிவித்துள்ள ராஜீவ் காந்தி, பிரச்சாரத்திற்கு பின் பேட்டியை தொடரலாம் என்று கூறி, பிரச்சாரத்திற்கான மேடையை நோக்கி பயணித்துள்ளார். அப்போது மேடையில் இருந்த ஐ.ஜி ஆர்.ராகவன் மேடைக்கு வலதுபுறம் உள்ள தொண்டர்கள் இடது பக்கம் வருமாறு அழைக்க, அதை கேட்டு மக்கள் வெள்ளம் ஓடி வந்து சிகப்பு கம்பள பகுதியை சுற்றி சூழ்ந்தது. இந்த சமயத்தில் தான் தானு மாலை அணிவிக்க முயன்று, காவல்துறை பெண் அதிகாரியால் தடுக்கப்பட்டு, பின் ராஜீவ் காந்தியால் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். தட்டுத்தடுமாறி மாலை அணிவிக்க தானு சென்றபோது தான் வெடிகுண்டு வெடித்துள்ளது.

10.25 வரை என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் இருந்த சமயம், ஜெயந்தி நடராஜன் ராஜீவ் காந்தியின் சிதறிய கால்கள் மற்றும் இதர உறுப்புகளை கண்டு, மூப்பனார் அவர்களை அழைத்து காண்பித்து, அது ராஜீவ் காந்திதான் என்பதை உறுதி செய்து பின் 10.50க்கு தான் ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பின் காரணமாக காலமானார் என்று செய்திகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியானது. அதன் பிறகு அடுத்த நாள் காலை 4.30 மணி வரை உடல்களை எடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை ஏற்பாடு செய்யும் பணியும் நடந்துள்ளது. ஒருகட்டத்தில் நடு இரவு 12.05-க்கு புகைப்படக்காரர் ஹரிபாபு என்பவரின் கேமராவில் உள்ள புகைப்படத்தினை எடுத்து அதை அவசர அவசரமாக போட்டோக்களாக மாற்றியுள்ளது காவல்துறை. கைரேகை நிபுணர்களின் உதவியுடன் இது நடந்துள்ளது. அதேவேளையில் பல்வேறு புகைப்படங்களும் அழிக்கப்பட்டுள்ளன என்பது ஜெயின் கமிஷன் விசாரனையில் சிபிஐ அளித்த தகவலில் தான் தெரியவந்தது. இப்படி பணிகள் எல்லாம் முடிந்த பின், காலை 6 மணிக்கு தான் விசாரனை குழுவிற்கும், தடவியல் நிபுணர் குழுவிற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. காலை 7.20க்கே ஸ்ரீபெரம்புதூர் சம்பவ இடத்திற்கு வந்தவர்கள், 9 மணிக்கு மேல் தான் சம்பவ பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அதன் பிறகு தான் விசாரனை என்ற ஒன்றே துவங்கியுள்ளது.

நிலமை இப்படி இருக்க, ராஜீவ் இறந்த மறுநாள், அதாவது விசாரனையே ஆரம்பிக்கப்படாத சூழலில் காலை 6.30க்கு அப்போதைய மத்திய அமைச்சரான திரு. சுப்பிரமணியன் சுவாமி பத்திரிக்கைகளுக்கு, இது விடுதலை புலிகளின் சதி திட்டம் என்று பேட்டி கொடுக்கிறார்.

இதுவரை தான் ராஜீவ் வழக்கில் நிகழ்ந்துள்ள குற்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

© 2017 TNSPIMT, Chetpet, Chennai.
Powered by Webnode
Create your website for free! This website was made with Webnode. Create your own for free today! Get started