எங்கள் அமைப்பின் விசாரனை தகவல்கள் - 2

இந்த இடத்தில் நீங்கள் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் என்னவென்று கேட்டால், பிரதமரின் தனிப்பட்ட முன்னாள் செயல உதவியாளரான திரு. வாசுதேவன், ஏப்ரல் 16, 1996 அன்று ஜெயின் கமிஷனிடம், '' என்னதான் பொது ரீதியில் சீக்கிய அமைப்பு இந்திரா காந்தியின் குடும்பத்திற்கு எதிராக இருந்தாலும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாத கலவரங்கள் ராஜீவ் காந்தியையே குறிவைத்தன. ஆனால் இது அவருக்கு தனிப்பட்ட முறையில் வைக்கப்பட்ட குறிகளாகவே பார்க்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

1987-ம் ஆண்டு இலங்கை தாக்குதல்

இந்தியா - இலங்கைக்கு இடையேயான ஒப்பந்தங்கள் ஜூன் 30, 1987-ல் கையொப்பமிட்ட சில நிமிடங்களில் இலங்கை Navy-யை சேர்ந்த 19 வயதுடைய விஜயமுனி விஜத் ரோஹ்னா என்பவர் துப்பாக்கியின் முனையால் ராஜீவ் காந்தியின் கழுத்தில் தாக்க முயன்றார். ஆனால் சுதாரித்துக்கொண்டு ராஜீவ் காந்தி விலகி அந்த தாக்குதலை தன் தோல்களில் தாங்கியுள்ளார். பின் இலங்கை உள்நாட்டு விசாரனையில், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவருக்கு ஆயுத உதவிகளை இந்தியா செய்துவருகிறது. இந்திய பிரதமர், அதை தடுக்க எதுவும் செய்யவில்லை. பிரபாகரனுக்கு மறைமுகமாக இந்திய பிரதமர் உதவுவதால் தாக்கினேன் என்று தெரிவித்தார்.

ஆனால், ராஜீவ் காந்தி இந்தியா திரும்பிய அடுத்த நாளே, அதாவது ஜூன் 31, 1987 அன்று மர்ம நபர்கள் சிலர் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அழைப்பு விடுத்து, ''இதுவரை இந்திய பிரதமர்கள் யாருமே தோல்களில் தாக்கப்பட்டதில்லை. முதல்முதலாக ராஜீவ் காந்தி தாக்கப்பட்டுள்ளார். அடுத்த முறை இலங்கையின் சார்பில் நாங்கள் அவரை கொன்றுவிடுவோம்'' என்று கூறியிருக்கிறார். இது இந்தியாவின் FBI, RAW மற்றும் SPG ஆகியோருக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை புலிகள் சார்பில், ராஜீவ் காந்திக்கு மே 20, 1991 வரை எந்த தாக்குதலும், அதற்கான முயற்ச்சியும் நடைபெறவில்லை. ஆனால் 21-ம் தேதி அவர்களின் தாக்குதலில் தான் ராஜீவ் காந்தி இறந்தார் என்று கூறப்பட்டது.

இனி நாம் பார்க்கவேண்டியது ஒன்று தான். ராஜீவ் படுகொலைக்கு யார் காரணம் ? என்பதுதான்.

கேள்வி 6. ராஜீவ் படுகொலைக்கு காரணம் யார் ? எந்த அமைப்பு அவரை கொலை செய்தது ? அதற்கான காரணம் என்ன ?

சென்னையில் உள்ள உளவுத்துறை, டிசம்பர் 12, 1989-ம் ஆண்டு ''இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தால், விடுதலை புலிகள் அமைப்பினர் ராஜீவ் காந்தி மீது கோபத்தில் உள்ளனர்'' என்று ராஜீவ் காந்திக்கு தகவல் அனுப்பியுள்ளனர். அதேவேளையில் டிசம்பர் 11, 1989-ம் ஆண்டு ராஜீவ் காந்திக்கு அனுப்பியுள்ள எச்சரிக்கை கடிதத்தில், ''சீக்கிய அமைப்பினர், ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு குறைந்துள்ளதை பயன்படுத்த உள்ளனர். இனி பாதுகாப்பு கடுமையாக இருக்க முடியாது என்பதால், அவரை கொலை செய்ய முயற்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்'' என்று கூறியுள்ளது. இந்த சமயத்தில் ஜெய்பூர் உளவு அமைப்பினர் ''ராஜீவ் காந்திக்கு சீக்கியர்களால் கொடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களில் மாற்றம் இல்லை'' என்று கூறியுள்ளனர்.

ரா அமைப்பு ராஜீவ் காந்திக்கு யாரால் ஆபத்து என்று ஒரு பட்டியலை 1989-ம் ஆண்டு இந்திய அரசிடம் கொடுத்துள்ளது.

1. இந்திய மற்றும் வெளிநாட்டு சீக்கிய அமைப்புகள்

2. ஜே.கே.எல்.எப்

3. போ.ஓ.கே

4. நேபால் அமைப்பினர்

5. இலங்கை சின்ஹல மற்றும் தமிழ் கூட்டமைப்புகள்

இந்த ரா அமைப்பின் அச்சுறுத்தல்கள் பட்டியலில் விடுதலை புலிகள் இடம்பெறவில்லை. மாறாக இலங்கை சின்ஹல மற்றும் தமிழ் கூட்டமைப்புகள் என்று இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியல் டிசம்பர் 9, 1989-ம் ஆண்டு இந்திய பிரதமரான வி.பி சிங் அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் கொடுக்கப்பட்ட பின்னர் தான் வி.பி சிங், ராஜீவ் காந்தியின் வீட்டை, அவருக்கு தெரியாமலேயே நோட்டம் விட ரகசிய உத்தரவுகளை போட்டுள்ளார் என்கிறது உளவு அமைப்புகள். இதில் ரா அமைப்பினர், சீக்கிய அமைப்புகளால் ராஜீவ் காந்திக்கு மிக அதிக அளவிலான ஆபத்துக்கள் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளனர். இது அவருக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்பதை குறிப்பதாக ரா அமைப்பு கூறுகிறது. ஆனால் இந்திய உளவுத்துறையோ Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்படவேண்டும் என்பதை தான் ரா அமைப்பு தவறுதலாக கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார். அதாவது மிக அதிக அளவு என்பது Z பிரிவு என்றும், மிக மிக அதிக அளவு என்பது Z+ என்றும் பிரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

1990 - 1991ம் ஆண்டு, ராஜீவ் காந்தியின் ஆதரவில் நடந்த சந்திரசேகர அரசு, ராஜீவ் காந்தியின் வற்புருத்தல் காரணமாக, தமிழகத்தில் திமுக ஆட்சியை கலைத்தது. தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதால், தங்களுக்கான உதவிகள் குறைந்துவிட்டன என்று விடுதலை புலிகள், ராஜீவ் காந்தி மீது கடும் கோபத்தில் இருந்ததாக சிறப்பு புலனாய்வு குழு கூறுகிறது. இந்த சூழலில் இந்திய உளவுத்துறை ஜூன் 5, 1987-ல் ஒரு அறிக்கையை ராஜீவ் காந்திக்கு அனுப்புகிறது. அதில். '' Serious danger to VIP security also arises from the developments in our immediate neighbourhood, particularly in Sri Lanka and Pakistan. The threat potential of Sinhala elements trained and abetted by Israeli Intelligence cannot be minimised. Certain elements among Sri Lanka Tamils, who feel unhappy about some aspects of Government of India's Policy, could also pose threat to the security of the Prime Minister and other VIPs.'' என்று கூறியுள்ளது.

இந்த கடிதம் கொடுக்கப்பட்ட அடுத்தமாதம் இலங்கையில், அந்நாட்டு சின்ஹல அதிகாரி ஒருவரால் ராஜீவ் காந்தி தாக்கப்படுகிறார். விசாரனையில் அவர் மறைமுகமாக ஆயுத உதவிகளுக்கு உதவி, பிரபாகரனுக்கு உதவி வருவதால் தாக்கியதாக தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு அடுத்த நாள், இந்திய தூதரகத்திற்கு அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில், ராஜீவ் காந்தி அடுத்த முறை கொலை செய்யப்பட்டுவார் என்று ஒரு மர்ம நபர் மிரட்டல் விடுக்கிறார்.

ஆக, இந்த விவகாரம் இலங்கையில் உள்ள தமிழக விடுதலை புலிகள் அமைப்பையும் தாண்டி, இலங்கை சின்ஹல அமைப்புகள் சிலவையும் ராஜீவ் காந்தியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது என்பது தெளிவாக்குகிறது.

இலங்கை பிரதமராக இருந்த ஜெயவர்தனாவின் கோரிக்கை படி IPKF வீரர்கள் இலங்கை சென்றனர். ஆனால் அடுத்து வந்த பிரதமர் அதை விரும்பவில்லை என்பதால் வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் விடுதலை புலிகள் அமைப்பின் கோபம் தனிந்தது என்கிறது இலங்கை அரசியல் வட்டாரம்.

1988-ம் ஆண்டு திமுக, இலங்கை பிரதமர் ஜெயவர்தனா இந்தியா வருவதை எதிர்த்து போராட்டம் நடத்தியது. அதில், திமுகவினர் தெளிவாக ஒரு வாசகத்தை வெளியிட்டனர். ''சீக்கியர்கள் இந்திராவை கொன்றனர். தமிழர்கள் ராஜீவை கொலை செய்வார்கள்'' என்பதே அந்த வாசகம்.

இதற்கு முன்பு 1987-ல், திமுக முக்கிய தலைவர்களில் ஒருவரான ச.கந்தப்பன் இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து போராடும் போராட்டத்தில், இம்முறை தீபாவளிக்கு தமிழகத்தில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று கூறி பீதியை ஏற்படுத்தினார். இது நம் தமிழக மக்களுக்கு வெறும் வாய்ச்சொல் என்று தெரியும். ஆனால் இதை பெரிதாக்கி ஊதி தள்ளியுள்ளது சிறப்பு புலனாய்வு குழு.

இதுவரை விடுதலை புலிகள் அமைப்பினர், ராஜீவ் காந்தி வருகைக்கு முன்பு பூச்சாண்டி காட்டும் விதத்தில் மூன்று முறை குறைந்த தாக்கும் சக்தி கொண்ட வெடிகுண்டுகளை (time bomb) வைத்து வெடிக்க வைத்துள்ளனர்.

ஜூன் 19, 1990-ல் பத்மநாபாவின் இல்லத்திற்கு ஏ.கே 47 ரக ஆயுதத்துடன் 6 எல்.டி.டி.ஈ அமைப்பினர் வந்து பத்மநாபாவை சுட்டு கொன்றுள்ளனர், பின் சென்னையில் இருந்து 350 கி.மீட்டர் தொலைவில் உள்ள திருச்சிக்கு மாருதி கார் மூலம் புறப்பட்டு, திருச்சியில் இருந்து வேதாரன்யம் வழியாக அடுத்த இரண்டு நாட்களில் சென்றுள்ளனர் இது சம்பந்தமாக தமிழக காவல்துறை விடுதலை புலிகள் அமைப்பினரை வழக்கில் சேர்க்கவில்லை என்று இந்திய உளவு அமைப்பு ஒன்று 1992-ல் குற்றம் சாட்டியது. பத்மநாபா வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என்றால், நீதிமன்றம் ஏன் இருவரை மட்டும் குற்றவாளிகள் என்று தீர்மானிக்கவேண்டும் ? 6 பேர் குற்றவாளிகள் எனப்படும்போது அதை ஏன் சிறப்பு புலன் விசாரனை அமைப்பு வழக்கில் தெளிவுப்படுத்தவில்லை ?

இந்த இடத்தில் நீங்கள் கவனிக்கவேண்டிய ஒன்று என்னவென்றால், பத்மநாபா கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு மற்றும் ராஜீவ் காந்தியின் வருகைக்கு முன்பு காவல்துறையை மிரட்ட வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் அனைத்தும் Tri-nitro-toluence வெடிகுண்டுகள்.

இந்த வகையான வெடிகுண்டுகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை வெடிபொருள் ஆராய்ச்சி மையத்தில் நாங்கள் கேட்டறிந்தோம். இது நைட்ரஜன் மூலம் உருவாக்கப்படும் வெடிபொருள் வகையை சேர்ந்ததாம். 1 கிராம் டி.என்.டி 1 லிட்டர் நைட்ரஜன் கேஸினை வெளியேற்றுமாம். இதை பைப் வெடிகுண்டு என்று பொதுவாக அழைப்பார்கள் என்று கூறுகிறது வெடிபொருள் ஆராய்ச்சி மையம். இதற்கு ஒரு Formula உண்டாம். CH 3C6H2(NO2)3 என்பது தான் அந்த Formula. இது ஜெர்மனியில் தான் முதலில் உருவாக்கப்பட்டதாம். பின் அனைத்து நாடுகளின் ராணுவத்தாலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறதாம். இதை தான் இலங்கையில் உள்ள விடுதலை புலிகள் அமைப்பு மே 20, 1991 வரை பயன்படுத்தியுள்ளது.

ஆக, சி4 வகையை விட மிக வித்தியாசமான டி.இ.டி என்ற வகையிலான வெடிகுண்டையே பத்மநாபனை கொலை செய்ததாக தமிழக காவல்துறை கூறும் சிவராசன் அமைப்பு பயன்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே சி4 வெடிபொருளை முக்கிய தலைவர்களை தாக்க பயன்படுத்திய ஒரே அமைப்பு சீக்கிய விடுதலை கேட்கும் காலிஸ்தான் அமைப்பு மட்டும் தான்.

முடிவெடுக்க தூண்டும் மூன்று முக்கிய தகவல்கள்

1. இந்த விவகாரத்தில் மே 20, 1991 வரை டி.இ.டி வகை வெடிகுண்டை பயன்படுத்தியுள்ள விடுதலை புலிகள் அமைப்பு சி4 வகை வெடிகுண்டை திடீரென பயன்படுத்தாது.

2. ஒருவேளை சி4 வகை வெடிபொருளை விடுதலை புலிகள் பயன்படுத்தியது என்றால், அதற்கு முன்பு ஒரு சிறிய ஒத்திகையை அந்த சி4 வகை வெடிபொருள் கொண்ட வெடிகுண்டை வைத்து சோதனையிட்டிருக்கும். (இது விடுதலை புலிகள் 2009 வரை பல்வேறு வெடிபொருட்களுக்கு செய்துள்ள சோதனை ஒத்திகைகளை வைத்தே கூறுகிறோம்)

3. இந்தியாவில் சி4 வகை ப்ளாஸ்டிக் வெடிபொருளை அப்போது பயன்படுத்தி வந்த ஒரே அமைப்பு சீக்கிய விடுதலை கோரிக்கை வைத்த தேசிய காலிஸ்தான் அமைப்பு மட்டும்தான்.

ஆக, இது முற்றிலும் ஒரு சீக்கிய அமைப்பின் திட்டத்தின் காரணமாக நடைபெற்ற படுகொலையாகவே பார்க்கப்படவேண்டும். ராஜீவ் வழக்கில் கொலை நடந்தது ஸ்ரீபெரம்பதூர் என்பதற்காக விசாரனை அமைப்பு விடுதலை புலிகள் தான் காரணம் என்ற முடிவை எடுத்துக்கொண்டு, பிறகு விசாரனை செய்தது தான் விடுதலை புலிகளே காரணம் என்ற தீர்மானத்தை உண்டாக்கியுள்ளது. இதுவரை நடந்துள்ள தாக்குதல்கள், வெடிகுண்டு கையாண்ட விதங்கள் ஆகியவற்றை எல்லாம் வைத்து ஆராய்ந்தால் தேசிய காலிஸ்தான் அமைப்பு அல்லது அதனுடன் சம்பந்தப்பட்ட வேறு ஒரு அமைப்பே இந்த படுகொலைக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கவேண்டும்.

இந்த முடிவிற்கு இன்னொரு காரணமும் உண்டு. விடுதலை புலிகள், ராஜீவ் காந்தி மீது கோபத்தில் இருந்திருந்தால், சீக்கிய அமைப்புகள் போல அவரை சந்திக்க விரும்பாமலே கொலை செய்திருக்கலாம். ஆனால் விடுதலை புலிகள் அமைப்பு ராஜீவ் காந்தியை சந்தித்தே தீரவேண்டும் என்ற முடிவில் 1990-ல் இருந்து முயற்ச்சிகளை காசி ஆனந்தன் மூலம் மேற்கொண்டது. அதன் பலனாக மார்ச் 5, 1991-ல் காசி ஆனந்தன், சிலரை அழைத்துக்கொண்டு எஸ்.சி சின்ஹா மூலம் ராஜீவ் காந்தியை சந்தித்தார். அந்த சந்திப்பிற்கு பின், பிபிசிக்கு பேட்டி அளித்துள்ள காசி ஆனந்தன், ''இந்த சந்திப்பின் முடிவில் எங்களுக்குள் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.'' என்று கூறியிருக்கிறார். இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கையாளர், மேலும் ஒன்றை செய்தியில் குறிப்பிடுகிறார். அதாவது, ராஜீவ் காந்தி வாசல் வரை வந்து அவர்களை காரில் ஏற்றி அனுப்பியதாகவும், அவரது காவலர்கள் அவர் அருகே செல்ல முயன்றும், ராஜீவ் காந்தி அதை தடுத்தார் என்றும் கூறியுள்ளார். இது இந்திய உளவுத்துறைக்கும் தெரிந்த ஒரு தகவலாக இருந்ததாக ஜெயின் கமிஷன் அறிக்கை கூறுகிறது. ஆக, ராஜீவ் காந்தி - விடுதலை புலிகள் சந்திப்பில் ஒருமித்த கருத்து உருவான பின், அடுத்த பிரதமர் அவர்தான் என்று முடிவான பின், தங்களுக்கான தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று உறுதியாக முடிவான பின், எதற்காக விடுதலை புலிகள் அவரை கொலை செய்யவேண்டும் ? அதற்கு எந்த நோக்கங்களும் இல்லையே ? இந்த ஒரு சந்திப்பு தானா ? என்று கேட்டால் இல்லை. இந்த சந்திப்புக்கு அடுத்தபடியாக லண்டனில் இருந்து வந்த விடுதலை புலிகள் அமைப்பின் மற்றொரு மூத்த தலைவரான அர்ஜுன் சிட்டம்பளத்தை மார்ச் 15-ம் தேதி ராஜீவ் காந்தி சந்தித்துள்ளார். இந்த இரண்டு சந்திப்புகளும், விடுதலை புலிகள் அமைப்பினர் வேண்டி, விரும்பி நடந்தேறிய சந்திப்புகள் ஆகும். 10ம் தேதி காசி ஆனந்தன் ஒருமித்த கருத்தை எட்டியதாக கூறியிருக்கிறார். 15ம் தேதி, தங்களின் கோரிக்கை பட்டியலை அர்ஜுன் சிட்டம்பளம் ராஜீவ் காந்தியிடம் வழங்கியிருக்கிறார். அந்த கோரிக்கைகளை ஏற்று, ராஜீவ் காந்தி இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு, அவர்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தை மீட்டுக்கொடுத்து, அவர்களின் தீர்க்கப்படாத பிரச்சனைகள் இலங்கை அரசுடன் பேசி, சுமூகமாக முடித்து வைக்கப்படும் என்று தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருக்கிறார். விடுதலை புலிகள் அமைப்பினரால் தன் உயிருக்கு ஆபத்து என்றால், ராஜீவ் காந்தி இந்த சந்திப்புகளை தவிற்த்திருப்பார். ஆனால் அவர் அதை செய்யவில்லை என்பது தான் விடுதலை புலிகளுக்கு இதில் துளி அளவு கூட தொடர்பு இல்லை என்பது வெட்டவெளிச்சமாக்குகிறது. 1989-க்கு பிறகு ரா மற்றும் இந்திய உளவுத்துறை அமைப்பின் அறிக்கைகளை பார்த்தால், இந்திய பாதுகாப்பு படையை விட, அதிக அளவில் எச்சரிக்கையாக ராஜீவ் காந்தி இருந்துள்ளார் என்பது தெரியவரும். அப்பேற்பட்ட எச்சரிக்கையுடன் இருந்தவர், தன் உயிருக்கு விடுதலை புலிகள் அமைப்பினரால் ஆபத்து என்றால், அவர்களை சந்தித்திருக்கமாட்டார். இதில் வேடிக்கை என்ன தெரியுமா ? இந்த சந்திப்பு பற்றி, இந்திய உளவுத்துறை எதுவுமே கண்டுக்கொள்ளவில்லையாம். ஜெயின் கமிஷன் முன்பு இந்திய உளவுத்துறை தாக்கல் செய்துள்ள மனுவில் இதை குறிப்பிட்டுள்ளது. ஆக, இது மத்திய அமைச்சரவையில் அப்போது இருந்த சிலரால் திட்டமிடப்பட்டு, அந்த திட்டத்தின் படி சீக்கிய அமைப்பில் உள்ள சிலரை தூண்டிவிட்டதால் இச்சம்பவம் அரங்கேறியுள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம்.

ஆக, இந்த வழக்கின் மிக முக்கிய முடிச்சு அவிழ்க்கப்படுகிறது. இந்த படுகொலைக்கு காரணம் சீக்கிய அமைப்புகளின் ஒன்றே...

1. இந்த முடிவை வேறு ஒரு கோணத்தில் இருந்தும் உங்களால் பெற முடியும். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பொட்டு அம்மன் எனப்படுபவர் முக்கிய குற்றவாளி என்று சிறப்பு புலனாய்வு குழு கூறியுள்ளது. ஆனால், பொட்டு அம்மன் எனப்படுபவர், விடுதலை புலிகள் அமைப்பிலேயே இல்லை என்று பிரபாகரன் பிபிசிக்கு பேட்டி கொடுத்துள்ளார். அம்மன் எனப்படும் மூத்த தலைவர் போர் ஒன்றில் இறந்துவிட்டார் என்று கூறியுள்ள பிரபாகரன், பொட்டு என்றொருவர் மட்டுமே உள்ளார். பொட்டு - அம்மன் ஆகியோர் இருவேறு நபர்கள் என்று விளக்கம் அளித்துள்ளார். இது சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரனை அலட்சியத்தை தெளிவாக்குகிறது என்றுதான் கூறவேண்டும்.

2. அதற்கு அடுத்தபடியாக காசி ஆனந்தன் இரண்டாவது முறையாக ராஜீவ் காந்தியை சந்தித்து, விடுதலை புலிகளுக்கு ஆதரவான கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்த்தமைக்கு நன்றியை தெரிவித்தார். மேலும், விடுதலை புலிகளின் கோரிக்கைகளுக்கு தொடர்ந்து ராஜீவின் ஆதரவு தேவை என்பதை வலியுறுத்தினார். இப்படி கடைசி நிமிடம் வரை ராஜீவ் காந்தி தங்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று நம்பிய விடுதலை புலிகள் அமைப்பு எப்படி ராஜீவ் காந்தியை கொலை செய்யும் ? ராஜீவ் காந்தியிடம் கடைசி நிமிடம் வரை கோரிக்கை வைத்தது முதல், அதை ராஜீவ் காந்தி ஏற்றுக்கொண்டது வரை என்று நடந்தவைகளை எல்லாம் பார்த்தாலே இந்த வழக்கில் விடுதலை புலிகளுக்கு தொடர்பு இல்லை என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ள முடியும்.

3. மே மாதம் 14-ம் தேதி டெல்லி மற்றும் அதை தொடர்ந்து நடந்த பரிதாபாத் பொதுக்கூட்டங்களில் ராஜீவ் காந்தியை கொல்ல சீக்கிய அமைப்பு ஒன்று முயன்றுள்ளது. இது இந்திய உளவுத்துறையால் அக்டோபர், 1991-ல் தான் கண்டேபிடிக்கப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இந்த அளவுக்கு தான் இந்திய உளவுத்துறை செயல்பட்டுள்ளது. மே 14-ம் தேதி ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அது பாதுகாப்பு அதிகரிப்பின் காரணமாகவும், பாதுகாப்பு கெடுபுடிகள் காரணமாகவும் கைவிடப்பட்டுள்ளது. ஸ்ரீபெரம்புதூர் பிரச்சாரத்திற்கு பாதுகாப்பு குறைவாக இருந்துள்ளது என்பது சிறப்பு புலனாய்வு குழு, வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன் குற்றச்சாட்டுகளில் ஒன்று. பாதுகாப்பு குறைவு மற்றும் காங்., தலைவர்களிடம் இல்லாத ஒற்றுமை போன்றவையெல்லாம் டெல்லி, பரிதாபாத்தில் போடப்பட்ட திட்டங்களுக்கு மாற்றாக ஸ்ரீபெரம்புதூரில் திட்டம் போட தூண்டியிருக்கலாம். அதற்கான வாய்ப்பு 100% உள்ளது. இதுபற்றி இன்றைய நாள் வரை இந்திய உளவுத்துறை துரிதமாக விசாரிக்கவில்லை. சிறப்பு புலனாய்வு குழுவோ தமிழகத்தில் நடந்தது. இலங்கை - இந்தியா ஒப்பந்தம் காரணமாக விடுதலை புலிகள் கோபமாக இருந்தது. இதனால் விடுதலை புலிகளே காரணம் என்று தீர்மாணித்து விசாரனையை தொடங்கியுள்ளது. விடுதலை புலிகள் அமைப்பு ராஜீவ் காந்தியை கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், நிச்சயம் அதை செயல்படுத்தியிருக்கும். கடைசி நாள் வரை ராஜீவ் காந்தியை சந்தித்து பேசமாட்டார்கள். கடைசி நாள் வரை விடுதலை புலிகள் அமைப்பினர் ராஜீவ் காந்தியுடன் சகஜ மனநிலையிலேயே பேசியுள்ளனர். திட்டம் தீட்டுபவர்கள், எதிரியை அடிக்கடி வந்து நேருக்கு நேர் சந்திக்கமாட்டார்கள். அதற்கான அவசியமும் இல்லை. ஆக திட்டம் தீட்டியவர்கள் வேறு என்பதை இதுவே உங்களுக்கு தெளிவாக்கும்.

இந்த வழக்கில் அலசப்படவேண்டிய ஒரு அம்சம் என்று பார்த்தால், சீக்கிய அமைப்பு 14ம் தேதிக்கு பின் தீட்டிய திட்டங்கள் என்ன ? என்பது மட்டும் தான். இதை இந்திய உளவுத்துறை அமைப்பு அலசினால் ராஜீவ் காந்தியின் மரணத்தில் தெளிவு ஏற்படும். அதேவேளையில், சோனியா மற்றும் ராகுலுக்கு அவர்களால் மேலும் பாதிப்பு உண்டாகுமா ? என்பதும் தெரியவரும்.

கேள்வி 7. இந்த வழக்கில் மேலும் யார், யாருக்கு தொடர்பு உள்ளது ?

இந்த வழக்கில் இரு அமைச்சகங்கள் விசாரனைக்கு உட்படுத்தப்படவேண்டும். அது உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சகங்கள். உள்துறை அமைச்சராக வி.பி சிங் மற்றும் சட்டத்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்புடன் சுப்பிரமணியன் சுவாமி இருந்துள்ளார்கள். இந்திய உளவுத்துறை பாதுகாப்பு குறித்த தகவல்களை இந்த இரு அமைச்சர்களிடமும் ஒப்புதல் பெற்ற பின்பே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எச்சரிக்கை தகவல்களை கொடுக்கும்.

இந்த வழக்கை பொருத்தவரை, 1989-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பை இழந்த பின் ராஜீவ் காந்திக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. 1989-1990 கால கட்டத்தில் z++ பிரிவு பாதுகாப்பு z பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் ரா அமைப்பு, இந்திய அரசு செய்த குற்றமாக உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சகத்தின் மீது வைத்தது. ஆனால் இரு அமைச்சகங்களும் இந்திய பாதுகாப்பு துறை சட்ட விதிகளின் படி, மிக மிக அபாயம் என்று குறிப்பிட்டால் மட்டுமே Z+ பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று கூறி வர்மா கமிஷன் முன்பு தகவல்களை தாக்கல் செய்திருந்தன. இதில் ஒரு ஒற்றுமை உள்ளது. எந்த கட்சிக்கு தலைவர் இழப்பு ஏற்பட்டதோ, அந்த கட்சியின் ஆட்சியில் ஜெயின் கமிஷனில், முன்பு தாக்கல் செய்யப்பட்ட அதே தகவல் மனுவாக கொடுக்கப்பட்டது.

அடுத்ததாக சந்திரா சாமி இந்த வழக்கில் சந்தேகிக்கப்பட்டுள்ளார். விடுதலை புலிகள் உட்பட பல்வேறு அமைப்புகளுக்கு ஆயுத பேரத்தை செய்து முடிக்கும் ஆயுதங்களை கைமாற்றிவிடும் நடுநிலை வர்த்தகராக செயல்பட்டு வந்துள்ள கே.பி என்பவருக்கு பலமுறை பணம் அனுப்பியுள்ளார். இது சம்பந்தமாக பிரபாகரனிடம் ஒருமுறை இலங்கையை சேர்ந்த பத்திரிக்கை ஒன்று 4.07.1992 அன்று எடுத்த பேட்டியில், ''குமரன் பத்மநாபன் எனப்படும் கே.பி ஆயுதங்களை கைமாற்றிவிடும் வர்த்தகத்தை பல அமைப்புகளுக்கு செய்து வருகிறார். அவர் விடுதலை புலிகளில் இருந்து 1989-ல் விலகிவிட்டார். ஆனாலும், எங்களுக்கு ஆயத தேவை வரும்போது, அதற்கான உதவிகளை ஆயுதங்களை கைமாற்றிவிடும் ஒரு வர்த்தகராக செய்து வந்தார்'' என்று கூறியுள்ளார். ஆக, இது மிகப்பெரிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது என்றே தான் கூறவேண்டும்.

சரி, குமரன் பத்மநாபன் விடுதலை புலிகளுக்காக பணம் பெறவில்லை என்றால், பிறகு எதற்காக பெற்றார் ? என்ற கேள்வி நிச்சயம் உங்களுக்கு எழும். குமரன் பத்மநாபன் லண்டனுக்கு சென்று வந்துள்ளார் என்பது ஜெயின் கமிஷன் அறிக்கையின் மூலம் தெரியவருகிறது. கே.பி ஏன் லண்டன் சென்றார் ? லண்டனில் அவர் யாரை சந்தித்தார் ? லண்டனிற்கு பின், வேறு எங்கு சென்றார் ? போன்றவற்றை தொடர்ந்து இந்திய உளவுத்துறை விசாரித்தால், உண்மை நிலவரம் வெளியே வந்துவிடும்.

இப்போது நாம் வழக்கு குறித்த இறுதியான முடிவுக்கு வரவேண்டும் என்று கருதுகிறோம். இது வழக்கு குறித்த முடிவுதான். எங்கள் விசாரனையின் முடிவு இல்லை. இந்த விசாரனையின் முடிவுகளுக்கு இன்னும் சில நாட்கள் நீங்கள் காத்திருக்கவேண்டும். ஆம், நாங்கள் இந்த வழக்கில், நாங்கள் சந்தேகிக்கும் சிலரை பற்றிய தகவல்களை, ஒவ்வொரு நாட்டில் இருந்தும், அங்குள்ள அந்நாட்டு அதிகாரிகள் சிலர் மூலம் பெற்று வருகிறோம். அது கிடைத்தால் தான் இந்த விவகாரத்தில் குற்றவாளிக்கு மறைமுக உதவியை செய்தவர் குறித்த விபரம் வெளியாகும். அதை நிச்சயம் நாங்கள் செய்வோம். சரி வழக்கு குறித்த இறுதி முடிவை பார்ப்போம். இந்த வழக்கின் போக்கையே எங்களின் விசாரனை மாற்றிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு மிக தெளிவான ஒரு பார்வையுடன் இந்த வழக்கை நாங்கள் கையாண்டோம். சிறப்பு புலனாய்வு குழு கோட்டை விட்ட சில இடங்களை எல்லாம் அலசி ஆராய்ந்தோம். வெடிகுண்டுகளின் நிலை, அது யார் பயன்படுத்தியது போன்றவற்றையெல்லாம் கண்டறிய நாங்கள் கடும் முயற்ச்சிகளை மேற்கொண்டோம். 49 நாட்கள் இந்த விசாரனையை நடத்தி, 50வது நாள் நாங்கள் இந்த வழக்கு குறித்த விசாரனையை முடிவுக்கு கொண்டு வருகிறோம். இந்த படுகொலை சம்பந்தமான, இதில் தொடர்புடையவர்கள் குறித்த தனிப்பட்ட விசாரனை, தொடர்கிறது.