எங்கள் அமைப்பின் விசாரனை தகவல்கள் - 1

கேள்வி 1. ராஜீவ் காந்திதான் அடுத்த இந்திய பிரதமர் என்பது உலகமே அறிந்த உண்மை. ராஜீவ் காந்தி எல்.டி.டி.ஈ அமைப்பினரிடம், இலங்கை அரசை வற்புருத்தி அந்நாட்டு தமிழர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ள நிலையிலும், அவர் தான் எதிர்வரும் தேர்தலில் பிரதமராவார் என்று தெரிந்தும் எல்.டி.டி.ஈ அமைப்பு எப்படி இந்த கோர சம்பவத்தை நிகழ்த்தும் ? அப்படியே நிகழ்த்தினாலும், தனக்கு தாய் வீடான தமிழகத்தில் நிகழ்த்தினால் தமிழகத்தில் இருந்து கிடைக்கும் உதவிகள் நின்றுபோய்விடுமே என்று யோசிக்க கூட தெரியாமலா இந்த கோரச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் ?

இந்த கேள்விக்கான உண்மைகளை ஆராய நாங்கள் முடிவெடுத்தோம். முதலில் விடுதலை புலிகள் தொடர்பான தகவல்களை சேகரிக்க, சிலரை நேரில் சந்தித்தோம். அந்த சந்திப்பின் முடிவில் எங்களுக்கு கிடைத்த தகவல் மிகவும் அதிர்ச்சகரமாகவே இருந்தது. அது என்னவென்றால், இந்த வழக்கிற்கும், எல்.டி.டி.ஈ அமைப்பிற்கும் சம்பந்தமே இல்லை.

எல்.டி.டி.ஈ அமைப்பு இந்த குற்றச்சம்பவத்தை நிகழ்த்தியதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், பிபிசிக்கு பேட்டியளித்துள்ள விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன், ''இந்த சம்பவத்தால் நாங்கள் மனமுடைந்துபோனோம். ராஜீவ் காந்தி அவர்கள் எங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்திருந்தார். அவர் இப்படி இறந்தது எங்களுக்கு அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் உள்ளது. இந்த படுகொலையில் எங்களை சம்பந்தப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த படுகொலைக்கும், எங்களுக்கும் துளி அளவு கூட சம்பந்தம் இல்லை'' என்று கூறியிருக்கிறார். மற்றொரு மூத்த தலைவரோ, இது ஒரு துரிதஷ்டவசமான சம்பவம். இது நிகழ்ந்திருக்க கூடாது என்று கூற, அது திரித்து, எல்.டி.டி,ஈ தான் கொன்றதாக ஒப்புக்கொண்டது என்று செய்தியாக்கப்பட்டது.

இந்த வழக்கில் முதல் கேள்விக்கான பதிலை நாங்கள் எப்படி தீர்மானித்தோம் என்றால்,

1. இந்த படுகொலை தமிழகத்தில் நடந்த சமயம், தமிழகத்தில் அதீத ஆதரவை விடுதலை புலிகள் பெற்றிருந்தது. ஆளும் கட்சியான அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களே அந்த அமைப்புக்கு தன்னுடைய முழு ஆதரவினை அளித்துள்ளார் என்று பின்நாட்களில் பிரபாகரனே வீடியோ ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்தில் இருந்துதான் அவர்களுக்கு நிதியுதவி, ஆயுத உதவி, உணவு உதவி போன்றவை கிடைத்து வந்தன. அப்படி இருக்கும்போது, தமிழகத்தில் விடுதலை புலிகளால் இந்த குற்றச்சம்பவம் நடந்தது என்று வைத்துக்கொண்டால் மக்களின் இந்த ஆதரவை விடுதலை புலிகள் இழந்துவிடுமே ? இதை யோசிக்காமல் விடுதலை புலிகள் இறங்குமா ? தன் அஸ்திவாரத்தை, தானே அழித்துக்கொள்ள எந்த விடுதலை இயக்கமும் நினைக்காது. அப்படியிருக்கும்போது விடுதலை புலிகள் மட்டும் எப்படி தன் அஸ்திவாரத்தை தானே அழிக்கும் ?

2. விடுதலை புலிகள் தான் கொன்றது என்றால், கொலை முயற்ச்சிக்கு தேவையான நிதி உதவிகளை செய்தது யார் ? சந்திராசாமி பணத்தை அள்ளி வாரி கே.பி என்கிற குமரன் பத்மநாபனுக்கு அளித்துள்ளார். குமரன் பத்மநாபன், அட்னன் கஷ்யோகி என்ற ஆயுத விற்பனை மன்னனுடன் தொடர்பில் இருந்தவர். அட்னன் கஷ்யோகியிடமிருந்து தான் விடுதலை புலிகள் தங்களுக்கு தேவையான ஆயுதங்களை, கே.பி மூலம் பெற்று வந்தனர். அதாவது கே.பி இடைத்தரகராக, பேரம் பேசி ஆயுதங்களை வாங்கி கொடுக்கும் நபராக ஆரம்பம் முதல் பணிபுரிந்துள்ளார். அவர் விடுதலை புலிகளுக்கும் மட்டும் வாங்கி கொடுக்கவில்லை. மேலும் பல அமைப்புகளுக்கு வாங்கி கொடுத்துள்ளார் என்கிறது ஜெயின் அறிக்கை. இடைத்தரகராக இருந்த குமரன் பத்மநாபனுக்கு எதற்காக சந்திராசாமி பணம் கொடுக்கவேண்டும் ? வி.புலிகளுக்கு உதவுவதாக இருந்திருந்தால், குமரன் பத்மநாபன் அந்த பணத்தை வி.புலிகளுக்காக செலவு செய்திருப்பாரே ? ஆனால் அப்படி எந்த கணக்கும் இல்லையே ? குழப்பமாக இருக்கிறதா ? இல்லை, தெளிவான ஒரு இடத்தை நோக்கி வந்துவிட்டோம் என்றே தோன்றுகிறது. சந்திராசாமி யாருக்காகவோ ஆயுதம் கேட்டு, அதிக விலை கொடுத்து குமரன் பத்மநாபன் மூலம் ஆயுதம் வாங்க காய் நகர்த்தியுள்ளார். இதுதான் அந்த தெளிவான இடம்.

3. சந்திராசாமி ஆயுதம் வாங்க பணம் கொடுத்தார் என்றால், அது எந்த வகையான ஆயுதம் ? யாருக்காக அது வாங்கப்பட்டது ? போன்ற கேள்விகள் வரிசையாக எழும். நிச்சயமாக இதற்கும் பதில் உண்டு. அதை அடுத்தடுத்த கேள்விகளுக்கான விடையின் மூலம் இந்த முடிச்சுக்களை அவிழ்க்கின்றோம்.

4. இது எல்லாவற்றையும் தாண்டி, ஆரம்பம் முதல் சிபிஐ தரப்பு விடுதலை புலிகள் தான் இந்த கோர சம்பவத்திற்கு காரணம் என்று முடிவெடுத்து விசாரித்து வந்தது. எதன் அடிப்படையில் அப்படி ஒரு முடிவெடுத்தது ? என்பதையும் நாங்கள் பின்னர் முடிச்சுக்களை அவிழ்த்து தெரிவிக்கின்றோம்.

5. விசாரனையே துவங்காத நிலையில் விடுதலை புலிகள் தான் காரணம் என்று சு.சாமி எதை வைத்து கூறினார் ? இலங்கையில் இருந்து தகவல் வந்ததாக கூறும் அவர், எப்படி இந்த தகவல் கிடைத்தது என்பதை ஏன் கூறவில்லை. தொலைப்பேசி மூலம் வந்தது என்றால், ஏன் சிபிஐ இதுவரை அந்த தொலைப்பேசி உரையாடல் குறித்த தகவலை சேகரிக்கவில்லை ? இது யாரை காப்பாற்ற நடந்த முயற்ச்சி ? இதற்கும் இறுதியிலேயே முடிச்சு அவிழ்க்கப்படும்.

இப்போது புரிகிறதா, இந்த வழக்கில் விடுதலை புலிகள் எப்படி சேர்க்கப்பட்டது என்று ? ஆம், வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத விடுதலை புலிகளை, இந்த வழக்கில் யாரையோ காப்பாற்றவேண்டிய பொறுப்புக்காக தவறுதலாக இணைத்துள்ளனர். இந்த கேள்விதான், யார் அந்த மர்ம நபர் என்ற மற்றொரு புதிரை உண்டாக்குகிறது.

யார் அந்த மர்ம நபர் ?? இந்த கேள்விக்கான விடை, இந்த குற்ற சம்பவம் குறித்த எங்களின் விசாரனை ஆய்வின் இறுதியில் தான் தெரியவரும்.

ராஜீவ் காந்திக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் விதத்தில் தான் இந்தியா - இலங்கை ஒப்பந்தம் இருந்ததாக கூறி, அதனால் விடுதலை புலிகள் தான் காரணம் என்று கூறியுள்ளார்கள் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைப்பினர். அந்த ஒப்பந்தத்தில் விடுதலை புலிகளுக்கு எதிராகவும், அவர்களின் கோட்பாடுகளுக்கு எதிராகவும் சில வாக்கியங்கள் இருந்துள்ளது. விடுதலை புலிகள் - ராஜீவ் காந்தி சந்திப்பில், விடுதலை புலிகளுக்கு எதிரான அந்த வாக்கியங்கள் நீக்கப்படும் என்று கூறி, தனது தார்மீக ஆதரவை ராஜீவ் காந்தி அவர்களுக்கு கொடுத்துள்ளார். ஆக, விடுதலை புலிகளுக்கு, ராஜீவ் காந்தியை கொலை செய்ய எந்த நோக்கமும் இல்லை. அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுவிட்டது. அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்கு பின் விடுதலை புலிகள், ராஜீவ் காந்தியை தாக்கவேண்டும் என்றால், எப்போதோ தாக்கியிருக்கவேண்டும். மே 21, 1991ம் ஆண்டு தான் தாக்கவேண்டும் என்ற அவசியமே அவர்களுக்கு இல்லை. அடுத்ததாக விடுதலை புலிகள் அமைப்பினர் கேரளத்தில் ஒத்திகை பார்த்துள்ளதாக கூறுகிறது புலனாய்வு பிரிவு. கேரளத்தில் ஒத்திகை பார்த்தவர்கள், கேரளத்திலேயே அவரை கொலை செய்திருக்கலாமே ? தார்மீக ஆதரவு கொடுக்கும் தாய் வீடான தமிழகத்தில் ஏன் செய்யவேண்டும் ? அவர்களுக்கு புத்தி பேதளித்துவிட்டதா என்ன ? இதனால் தமிழகத்தின் தார்மீக ஆதரவை இழப்பார்கள் என்ற பொது அறிவு கூடவா அவர்களுக்கு இருக்காது ? உதாரனத்திற்கு, உங்களுக்கு ஒரு மாநில அரசு ஒரு வழக்கில் உதவுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். வழக்கு முடிவதற்குள் அந்த மாநில அரசை நீங்கள் பகைத்துக்கொள்வீர்களா ? இல்லை. அதேபோல தான். தனி ஈழத்திற்கு தமிழகம் ஆதரவு கொடுத்து வந்தது. தனி ஈழம் கிடைப்பதற்கு முன்பு எப்படி மாநிலத்தை அவர்கள் பகைத்துக்கொள்ள முடியும் ? ராஜீவ் காந்தியை கொலை செய்யவேண்டும் என்றால், எப்போதோ அவர்கள் கொலை செய்திருக்கலாம். அது ஏன், திட்டமிடப்படாத, தீர்மானிக்கப்படாத ஸ்ரீபெரம்புதூர் கூட்டத்தின் போது கொல்ல வேண்டும் ? இது சிறப்பு புலனாய்வு பிரிவின் விசாரனையை வெகுவாக இடிக்கிறதே ? சரி அப்படி என்னதான் அந்த இந்தியா - இலங்கை 1987ம் ஆண்டு ஒப்பந்தத்தில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா ? அதை உங்களுக்கு ஒவ்வொன்றாக பிறகு விளக்குகின்றோம். அதற்கு முன்பு மற்றொரு மிக முக்கியமான கேள்வி ஒன்று இந்த வழக்கில் எழுகிறது.

கேள்வி 2. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேர் மீதும் உள்ள தடா சட்டத்தை 1998ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட D.NO 1151/1998 என்ற வழக்கில் மூவர் நீதிமன்ற அமர்வு நீக்கியுள்ளது. தடா சட்டம் நீக்கப்பட்டுள்ளது என்றால், தடா சட்டத்தின் SECTION-களை பயன்படுத்தி பெறப்பட்ட வாக்குமூலங்களும் நீக்கப்படவேண்டுமே ? இதை ஏன் உச்சநீதிமன்றம் செய்ய முன்வரவில்லை ?

தடா சட்டம் நீக்கப்பட்டுவிட்டது என்கிற போது, தடா சட்டத்தின் படி Section 15 எப்படி இந்த வழக்கில் பொருந்தும் ? தடா சட்டத்திற்கும் - வழக்கின் குற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை என்கிறபோது தடா சட்டத்தின் Section 15 மட்டும் இந்த வழக்கில் பொருந்தும் என்றால், எப்படி தடா சட்டம் நீக்கப்பட்டதாக நீதிபதிகள் கூற முடியும் ? இது சிலரின் கேள்வி. Section 30 of the Evidence Act படி தடா சட்டத்தின் Section 15 இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாம். அதாவது, Section 30 of the Evidence Act discloses that Consideration of proved confession affecting person making it and others jointly under trial for same offence - When more persons than one are being tried jointly for the same offence, and a confession made by one of such persons affecting himself and some other of such persons is proved, the Court may take into consideration such confession as against such other person as well as against the person who makes such confessionஎன்று கூறுகிறார்கள். இதில் வழக்கறிஞர்கள், தெளிவுப்படுத்தவேண்டிய இடம் எது என்று கேட்டால் ''When more persons than one are being tried jointly for the same offence'' என்ற இந்த வார்த்தையை தான். The Offence does not comes under Tada Act. If Offence is not under Tada Act, The Accused Persons are not Tried Jointly in the offence under Tada Act. ஆக, Section 15-ம் வழக்கில் சேர்த்துக்கொள்ளக்கூடிய சட்டப்பிரிவு இல்லை. குற்றம் தடா சட்டத்தின் படி இல்லை. ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள், ஒரே குற்றத்தின் அடிப்படையில், குறிப்பிடப்பட்டுள்ள தடா சட்டத்தின் படி குற்றம் புரிந்திருந்தால் மட்டுமே ஆவன சட்டப்பிரிவு 30 பொருந்தும். இந்த வழக்கில் ஆவன சட்டப்பிரிவு 30, தடா சட்டத்தின் படி குற்றம் புரியாத இவர்களுக்கு எந்த வகையிலும் பொருந்தாது. ஒருவேளை தடா சட்டப்பிரிவு 15 இவர்களுக்கு பொருந்துமானால், தடா சட்டப்பிரிவு 3-ம் இவர்களுக்கு பொருந்தும் தான்.

இதை எல்லாம் வைத்து பார்த்தால், நீதி கிடைக்காமல் இருக்க, சதி நடந்துள்ளது போல தெரிகிறதா ? ஆம், நடந்துள்ளது. அதை வெட்டவெளிச்சமாக்கவே நாங்கள் முயன்று வருகிறோம். இதை வெட்டவெளிச்சமாக்க நாங்கள் முற்படும்போது மூன்று மிரட்டல் கால்களை நாங்கள் சந்தித்தோம். முதல் அழைப்பு 20.07.2016 அன்று இரவு 10 மணிக்கு வந்தது. அதில், ''இந்த வழக்கு உங்களுக்கு தேவையற்றது. இதை விடுத்துவிட்டு நீங்கள் வேறு ஒரு வழக்கு குறித்து ஆராயுங்கள்'' என்று பேசிய நபர், அதே எண்ணில் இருந்து 22.07.2016 அன்று ''சொல்ல சொல்ல கேட்காமல் இந்த வழக்கு குறித்து நீங்கள் ஆராய்ந்து வருகிறீர்கள். தேவையில்லாத வேலை. இனியும் இதை தொடர்ந்தால் நன்றாக இருக்காது'' என்று தெரிவித்தார். மூன்று நாட்களுக்கு பிறகு, இந்த வழக்கில் ஜெயின் கமிஷன் தெரிவித்த, இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் எங்களை சந்திக்கவேண்டும் என்று அழைத்து, கார் ஒன்றை அனுப்பி தன் வீட்டிற்கே அழைத்து சென்றார். அங்கு அவர் ''இது தேவையற்ற ஒன்று. உங்கள் திறமைகளை இதில் வீணடித்துவிடாதீர்கள். இது முடிந்துபோன வழக்கு. இந்த வழக்கை நீங்கள் தோண்டுவதால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. இதனால் நீங்கள் தான் அவஸ்தைகளை அனுபவிக்க உள்ளீர்கள்'' என்று கூறினார். அந்த மிரட்டல் குறித்த வீடியோ தொகுப்பு இந்த வழக்கு விசாரனை தொகுப்புகளின் முடிவில், இறுதி நாள் அன்று வெளியிடப்படும். இனி வழக்கிற்குள் செல்வோம்.

IPC Section 120-B எப்படி பேரறிவாளனுக்கு உகந்ததாகும் ? பேரறிவாளனுக்கு மற்றவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெரியாது. பேரறிவாளன் பேட்டரி வாங்கினார் என்று கூறிய SIT, ராஜீவ் கொலை செய்ய தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் பெல்ட் வெடிகுண்டிற்காகத்தான் அவர் அதை வாங்கினார் என்று எதையுமே வழக்கில் குறிப்பிடவில்லை. இது SIT அறிக்கையை முழுமையாக படித்து முடித்தவுடன் தான் தெரிவிக்கின்றோம். இதில் எந்த குளறுபடியும் இல்லை.

இவை எல்லாவற்றுக்கும் அடுத்தபடியாக குற்றம் புரிந்ததாக கூறப்படும் பேரறிவாளன் மற்றும் இரும்போறை இலங்கைக்கு சென்றதாக நீதிபதி தாமஸ் தீர்ப்பில் குறிப்பிடுகிறார். அவர்கள் இலங்கைக்கு சென்றார்கள் என்று எதை வைத்து SIT தீர்மானித்தது ? பாஸ்போர்ட் மூலம் சென்றார்கள் என்றால், அவர்கள் சென்ற பாஸ்போர்ட் குறித்த தகவலை ஏன் SIT தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை ? இல்லை, படகு மூலம் சென்றார்கள் என்றால், கடலோர காவல்படை இவர்களை கண்காணிக்கவே இல்லையா ?

இந்த வழக்கில் பல்வேறு முடிச்சுகள் உள்ளன. முதல் முடிச்சு அவிழ்க்கப்பட்டுவிட்டது. அதாவது விடுதலை புலிகளுக்கும், இதற்கும் சம்பந்தமே இல்லை.

ஒருவேளை நீங்கள் விடுதலை புலிகள் தான் காரணம் என்று கூறினால், உங்களுக்கு சில கேள்விகளை முதலில் முன்வைக்கின்றோம்.

1. ராஜீவ் காந்தி ஸ்ரீபெரம்புதூரில் பிரச்சாரம் செய்கிறார் என்ற தகவல் 20ம் தேதி வரை தமிழக காங்., கட்சியினருக்கே தெரியாது. இதை வாழப்பாடி ராமமூர்த்தி அவர்கள் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழக காங்., கட்சி, கூட்டணி கட்சியான அஇஅதிமுக உட்பட யாருக்குமே தெரியாத பிரச்சார திட்டம் விடுதலை புலிகளுக்கு எப்படி தெரிந்தது ? பிரச்சார திட்டத்தை போட்ட குழுவிடம் ஏன் விசாரனை நடைபெறவில்லை ?

2. பிரச்சார திட்டத்தின் படி ராஜீவ் காந்தி கேரளாவில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, திட்டமிடப்படாத ஸ்ரீபெரம்புதூர் கூட்டத்திற்கு வருகிறார் என்று கூறும்போது, யாசர் அராபத் உட்பட பலர் கொடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் அவருக்கு ஏன் உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை ? RAW அமைப்பு அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்குமாறு மத்திய அரசை அறிவுருத்தியும், ஏன் மத்திய அரசு அவருக்கான பாதுகாப்பை வழங்கவில்லை ?

3. திட்டமிடப்படாத கூட்டத்தில் பங்கேற்க, துப்பாக்கி ஏந்தாத பாதுகாவலருடன் பயனிக்க ராஜீவ் காந்தியை ஏன் தமிழக காங்., தலைவர்கள் அனுமதித்தனர் ? துப்பாக்கி கிடைக்க கேரளத்தில் இருந்து பாதுகாவலர் வரும்வரை ஏன் அவரை காத்திருக்குமாறு அறிவுருத்தவில்லை ?

4. திட்டமிடப்படாத கூட்டம் என்கிற போது இது எப்படி விடுதலை புலிகளுக்கு தெரியவரும் ? சொந்த கட்சியினருக்கே தெரியவராத போது எப்படி வெளிநாட்டினருக்கு தெரியவரும் ?

5. வயர்லெஸ் பேச்சு மூலம் இந்த சதி நடக்க உள்ளதாக தெரியவந்தது என்று கூறும் சிறப்பு புலனாய்வு குழு, ஏன் ராஜீவ் ஸ்ரீபெரம்புதூர் செல்வதை தடுக்கவில்லை ? சரி, தடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அந்த வயர்லெஸ் பேச்சு அடியோவை ஏன் ஜெயின் மற்றும் வர்மா கமிஷன் முன்பும், நீதிமன்றங்கள் முன்பும் சமர்பிக்கவில்லை ?

இந்த 5 கேள்விகளுக்கும் உங்களிடம் பதில் உள்ளதா ? எங்களிடம் உள்ளது.

பிரச்சார திட்டத்தில் இல்லாத ஒரு கூட்டத்தில் பங்கேற்க ஸ்ரீபெரம்புதூருக்கு ராஜீவ் வந்துள்ளார். அதுவும் துப்பாக்கி ஏந்தாத ஒரு பாதுகாவலருடன். அவரது உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு தேவை என்று காவல்துறையிடம் அவசர அவசரமாக அறக்க-பறக்க 20-ம் தேதி மனு கொடுத்த வாழப்பாடி ராமமூர்த்தி உட்பட தமிழக காங்., தலைவர்கள் இதை கண்டுக்கொள்ளவில்லை. திட்டமிடப்படாத ஒரு கூட்டத்தில், அதுவும் பயங்கரவாத அச்சுருத்தல் அதிகம் கொண்ட ஒரு முன்னாள் பிரதமர் பங்கேற்கும் கூட்டத்திற்கு மத்திய அரசும், ஜனாதிபதியின் கீழ் உள்ள தமிழகத்தின் கவர்னர் ஆட்சியும் உரிய பாதுகாப்பை வழங்க தவறிவிட்டன. இப்படி ஒரு கோர சம்பவம் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று சிறப்பு புலனாய்வு குழு ஒரு வயர்லெஸ் ஆடியோவை குறிக்காட்டுகிறது. அப்படியானால் இந்த திட்டம் நடைபெறும் என்பது ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரிந்துள்ளது. தெரிந்தும் கூட பாதுகாப்பை அதிகப்படுத்தவில்லை. சரி, அப்படியே விடுதலை புலிகள் தான் கொலை செய்தது என்று வைத்துக்கொண்டால், பேசப்பட்ட ஆடியோ ஒலி எங்கே ? அதை ஏன் சிறப்பு புலனாய்வு குழு சமர்பிக்க மறுத்துவிட்டது ?

ஒரு அதி-முக்கிய தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் அடிப்படை என்பது முட்டாள்தனமானதாகவே தெரிகிறது. ஒருவேளை வயர்லெஸ் பேச்சு உண்மையென்றால், அந்த ஆடியோ டேப் ஏன் ஜெயின் மற்றும் வர்மா கமிஷன் முன்பு அளிக்கப்படவில்லை ? ஆக, இது எல்லாமே விடுதலை புலிகளுக்கு தமிழக அரசு கொடுத்துவந்த ஆதரவை, தமிழகம் பின்வாங்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு நடத்தப்பட்ட சதியாகவே பார்க்கப்படவேண்டும். இதில் யார் தொடர்புடையவர்கள் என்பதை இறுதியில் பட்டியலிட்டு நாங்கள் தெரிவிக்கின்றோம்.

இதை எல்லாம் தாண்டி, 1991-ம் ஆண்டு காங்., தேர்தல் வாக்குறுதி என்ன தெரியுமா ? இலங்கை தமிழர்களுக்கு, அவர்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தை மீட்டுக்கொடுத்து, அவர்களின் தீர்க்கப்படாத பிரச்சனைகள் முடித்து வைக்கப்படும் என்றும், இலங்கை அரசுடன் அவர்களுக்கு உள்ள எல்லை பிரச்சனைகள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்பதுதான்.

அதாவது விடுதலை புலிகளின் கோரிக்கைகள் படி, இலங்கை தமிழர்களுக்கான தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்பதே இந்த வாக்குறுதியின் சாராம்சம். இப்படிப்பட்ட வாக்குறுதியை, ராஜீவ் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி செல்லும் காங்., கட்சி கொடுத்த பின்னும், விடுதலை புலிகளுக்கு அவரை கொலை செய்ய என்ன எந்த நோக்கமும் இல்லை.

அடுத்ததாக ராஜீவ் தான் பிரதமர் என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள். அப்படி இருக்கும்போது இதை அவர்கள் செய்தால், அவர்களை விட உலகில் முட்டாள்கள் வேறு எவருமே இல்லை என்பதுதான் எங்களின் கூற்று.

அடுத்ததாக முன்பே சொல்லப்பட்டது போல இலங்கை தமிழர்களுக்கு, தமிழ்நாடு 1980 முதல் தாய்வீடாகவே கருதப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கு அப்போதைய முதலமைச்சர் திரு. எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் அதிக ஆதரவை கொடுத்து, அவர்களுக்கென்று தனி மரியாதையையே உண்டாக்கினார். அதன் பின் அமைந்த திமுக அரசும், திமுக அரசுக்கு ஆதரவு கொடுத்த தி.கவும் தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவே இருந்துள்ளனர். அப்படி இருக்கும்போது இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு வந்து செல்வது என்பது 1991-ல் புதிதல்ல. இப்படி இருக்கும்போது, இலங்கை தமிழர்கள் வந்தார்கள், சென்றார்கள், மீண்டும் வந்தார்கள் என்று கூறி அவர்களை விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று சிறப்பு புலனாய்வு குழு கூறியுள்ளது. அவர்கள் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் தான் என்பதற்கு சிறப்பு புலனாய்வு குழுவிடம் எந்த ஆதாரமும் இல்லை. அவர்கள் ஆயுத பயிற்ச்சி பெற்றவர்கள் என்பதை நிரூபிக்கவும் போதுமான ஆதாரங்கள் இல்லை. அடுத்ததாக அட்னன் கஷ்யோகி போன்றோரிடமிருந்து கே.பி பெற்றுத்தரும் ஆயுதங்கள் மூலம் அவர்கள் ராஜீவ் காந்தியை தொலைவில் இருந்து கொலை செய்துவிட்டு, தப்பி சென்றிருக்கலாமே ? ஆயுதப்பயிற்ச்சியை முறையாக தெரிந்தவர்கள் இதைதான் செய்வார்கள். அப்படி இருக்கும்போது ஏன் பெல்ட் வெடிகுண்டு பயன்படுத்தவேண்டும் ? பெல்ட் வெடிகுண்டு பயன்படுத்தி தாக்குதல் நடத்தினால், தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்பதை சிந்திக்காமலா விடுதலை புலிகள் களத்தில் இறங்குவார்கள் ? எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திற்கு முன்பு முதல் இலங்கையில், அந்நாட்டு அரசுடன் போர் நடத்தும் அவர்களுக்கு இது கூடவா தெரியாது ?

இந்த கேள்விகள் எல்லாமே விடுதலை புலிகளுக்கும், இந்த வழக்கிற்கும் சம்பந்தமே இல்லை என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. அடுத்ததாக இந்த வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை புலிகளை சேர்ந்தவர்கள் என்று கூறவே இயலாது. அதற்கு காரணம் என்னவென்றால், விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்தவர்கள் நிச்சயமாக ஆயுத பயிற்ச்சி கற்றிருக்கவேண்டும். குறைந்தபட்சம் ஆயுத தாக்குதல்களில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பயிற்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்ற உத்தரவை ஆரம்பம் முதல் அந்த இயக்கம் கடைபிடித்து வந்ததாக பிரபாகரன் பிபிசிக்கு அளித்த பேட்டியே சாட்சியாக இருக்கிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இந்த இரண்டுமே தெரியாதவர்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் இயக்கத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு கூட தகுதியில்லாதவர்கள் தான் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களாக உள்ளனர். ஆக, இது விடுதலை புலிகளுக்கு தொடர்பில்லாத ஒரு வழக்கு என்று தான் பார்க்கப்படவேண்டும். ஒருவேளை விடுதலை புலிகளுக்கு தொடர்பு உள்ளது என்று வைத்துக்கொண்டால், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு இந்த வழக்கில் தொடர்பே இல்லை என்றுதான் கூறமுடியும்.

இந்த வழக்கில் நீதிபதி தாமஸ் ஒரு வாக்கியத்தை குறிப்பிடுகிறார். அது மிக முக்கியமான வாக்கியம். '' Section 15 of the TADA enables the confessional statement of an accused made to a police officer specified therein to become admissible "in the trial of such a person". It means, if there was a trial of any offence under TADA together with any other offence under any other law, the admissibility of the confessional statement would continue to hold good even if the accused is acquitted under TADA offences.'' அதாவது தடா குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் குற்றம் செய்திருந்தால், Section 15 படி தடா சட்டப்பிரிவுகளின் படி வாக்குமூலம் பெற்றால் அது ஏற்றுக்கொள்ளப்படும். இது தடா சட்டம் அவர்களுக்கு பொருந்தாது என்றாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் ஆவன சட்டம் 30, ஒரே சட்டத்தின் படியான குற்றத்துடன் இணைந்து, வேறு பல குற்றங்களும் செய்யப்பட்டிருந்தால், தடா சட்டப்பிரிவு 15-ன் படி பெறப்பட்ட வாக்குமூலங்கள் செல்லும் என்று கூறுகிறது. இதை நன்றாக புரிந்துக்கொள்ளவேண்டும் என்றால், கீழமை தடா சிறப்பு நீதிமன்றம், தடா குற்றச்சாட்டின் கீழ் வழக்கை நடத்துகிறது. அந்த வழக்கில் போலி பாஸ்போர்ட் உட்பட பல சட்ட பிரிவுகளும் இணைத்துவிடப்படுகின்றன. தடா சட்டப்பிரிவு 15-ன் கீழ், தடா சட்டத்துடன் இணைந்து வேறு சட்டப்பிரிவு வழக்குகளும் இணைத்துள்ளது தவறாகாது. அதேவேளையில் ஆவன சட்டப்பிரிவு 30-ன் படி, ஒரு சட்டப்பிரிவின் கீழ் செய்யப்படும் குற்றம், மற்றொரு சட்டப்பிரிவுடன் இணைக்கப்பட்டிருந்தால், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஒரே சட்டப்பிரிவின் கீழ் (தடா சட்டப்பிரிவு 2,3 மற்றும் 4) வர நேர்ந்தால் ஆவனங்கள் ஏற்கப்படும் என்று தான் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை பொருத்தவரை தடா சட்டம் பொருந்தாது. தடா சட்டம் பொருந்தாது என்கிற போது, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஒரே சட்டத்தின் கீழ் வரவில்லை, வரவும் மாட்டார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஒரே சட்டத்தின் கீழ் வரவில்லை என்கிற போது, ஆவன சட்டப்பிரிவு 30-ன் படி, தடா சட்டப்பிரிவு 15-ம் இந்த வழக்கிற்கு பொருந்தாது. தடா சட்டப்பிரிவு 15-ம் இந்த வழக்கிற்கு பொருந்தாது என்றால், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் செல்லாது. இதை பல்வேறு வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து, கலந்து பேசிய பின்பே நாங்கள் தெரிவிக்கின்றோம். even if the accused is acquitted under TADA offences என்ற வாக்கியம் தடா சட்டப்பிரிவு 15-ல் இல்லை என்பதை முதலில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வளவு தான்.

இது இரண்டாவது முடிச்சு... இதையும் அவிழ்த்துவிட்டோம்.

கேள்வி 3. இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்களுக்கும், வழக்கிற்கும் என்ன தொடர்பு - உண்மைகளை போட்டு உடைக்கின்றோம்.

உச்சநீதிமன்ற நீதிபதி தாமஸ் தனது தீர்ப்பில், நளினி, சிவராசனுடன் பேசியிருக்கிறார் என்று கூறியுள்ளார். நளினி எந்த வழியில் பேசினார் ? வயர்லெஸ் மூலம் என்றால், அதை காவல்துறை கண்காணிக்கவில்லையா ? கண்காணித்தது என்றால், ஏன் பேசிய சில மணி நேரங்களிலேயே நளினியை கைது செய்யவில்லை ? நளினி இந்திரா காந்தியின் சிலை பகுதியில் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் சுபாவுடன் ஓடியதாக நீதிபதி குறிப்பிடுகிறார். நளினி ஓடினார் என்பதை எதை வைத்து நீதிபதி உறுதி செய்தார் ? குற்றச்சம்பவம் நடந்த தினத்தன்று எடுக்கப்பட்ட வீடியோ பதிவு சமர்பிக்கப்படவில்லை. சமர்பிக்கப்படாமல் அது இன்று வரை முன்னாள் கேரள கவர்னர் மற்றும் முன்னாள் சிபிஐ தலைவரான எம்.கே.நாராயணன் அவர்களால் பாதுகாக்கப்பட்டு வருவதாக சிபிஐ தரப்பே கூறுகிறது. அப்படி இருக்கும்போது அதீத கற்பனை சக்தியுடன் எழுதப்பட்ட ஒரு வாக்குமூலம், தடா சட்டப்பிரிவு 15 இந்த வழக்கிற்கு செல்லுபடியாகாது என்று கூறும்போது அந்த அதீத கற்பனை சக்தியும் உடைத்தெரியப்படுகிறது.

இதில் ஒரு விபரம் சிறப்பு புலனாய்வு குழுவால் கூறப்பட்டுள்ளது. சாந்தனுக்கு, விடுதலை புலிகள் கல்வி கட்டனத்தை செலுத்தியுள்ளது என்பதுதான் அது. இது உண்மையா என்பதை ஆராய நாங்கள் முற்பட்டோம். ஆராய்ந்தோம். விடுதலை புலிகள் இயக்கும் சாந்தனுக்கு மட்டும் இல்லை, தமிழகத்தில் அப்போது இருந்த சிலருக்கும் இதுபோன்ற உதவிகளை மேற்கொண்டிருந்துள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம். அடுத்ததாக தமிழகத்தின் மூன்று முக்கிய கட்சிகளின் தலைவர்களும், தங்களின் பங்கிற்கு விடுதலை புலிகள் அமைப்பிற்கு நன்கொடைகளை வாரி வழங்கியுள்ளனர். அதில் ஒருவர் இறந்துவிட்டாலும், மற்ற இருவர் இன்றும் உயிருடனேயே இருக்கின்றனர். அவர்களை ஏன் விசாரனை வளையத்திற்குள் சிறப்பு புலனாய்வு குழு கொண்டுவரவில்லை ?

அடுத்ததாக, பேரறிவாளன் இலங்கை சென்றார் என்று நீதிபதி தாமஸ் குறிப்பிடுகிறார். அதாவது பேரறிவாளன் தனது வாக்குமூலத்தில் இதை தெரிவித்துள்ளதாக கூறுகிறார். பேரறிவாளன் இலங்கைக்கு செல்வது என்பது இயலாத காரியம். காரணம், 20 வயது தமிழக இளைஞன், அதுவும் திராவிடர் கழகத்தின் வளர்ப்பில் இருந்த ஒரு இளைஞன், இலங்கை சென்றுள்ளான் என்பது அதீத கற்பனை. சரி சென்றான் என்றால் நிச்சயம் கப்பல் மூலமாகத்தான் சென்றிருக்க முடியும். கடலோர காவல்படை இதை தடுக்கவில்லையா ? இந்திய கடலோர காவல்படையை விட்டுவிடுங்கள். அவர்கள் இந்த வழக்கில் எதையுமே கவனிக்கவில்லை என்பது வேறு விவகாரம். இலங்கை கடலோர காவல்படை இதை கண்காணிக்கவே இல்லையா ? தமிழ் ஈழம் என்ற பத்திரிக்கையை தமிழகத்தில் பேரறிவாளன் விற்றாரா ? அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இல்லை. தி.க வின் பத்திரிக்கை விடுதலை. அதைக்கூட பேரறிவாளன் விற்றிருக்கமாட்டார். அது எப்படி என்பது ஊர் அறிந்த கதை. சரி, அடுத்ததாக 9 வோல்ட் பேட்டரிகள் இரண்டு பேட்டரிக்களை பேரறிவாளன் வாங்கினார் என்று நீதிபதி கூறுகிறார். ஆனால் அவர் அதை ராஜீவை கொலை செய்ய சிவராசனிடம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் எதுவுமே இல்லை. அவர் முதலில் பேட்டரிக்களை சிவராசனிடம் தான் கொடுத்தார் என்பதற்கே ஆதாரம் இல்லை.

அடுத்ததாக 2 கார் பேட்டரிக்களை பேரறிவாளன் வாங்கியதாக நீதிபதி கூறுகிறார். 2 கார் பேட்டரிக்களை பேரறிவாளன் வாங்கினார் என்றால், அந்த கார் பேட்டரிக்களை வைத்து என்ன செய்தார் ? என்பதை நீதிபதி தீர்ப்பில் குறிப்பிடவே மறந்துவிட்டார். சரி, மே 20,1991-ம் தேதி ஹரி பாபு, நளினி, தாணு, முருகன் ஆகியோரை பேரறிவாளன் சந்தித்தார் என்று நீதிபதி கூறுகிறார். அதேவேளையில் நளினி மீதான குற்றச்சாட்டின்போது, நளினி அரைநாள் விடுமுறை பெற்றுக்கொண்டு 21-ம் தேதி காஞ்சிபுரம் சென்றுள்ளார் என்று கூறுகிறார். அன்று முதல் 2006 வரை 2 மணிக்கு மேல் என்பது அரைநாள் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும், 4.30 மணி நேர பயனம் என்பது இன்றுவரை பொதுவானதாகவே உள்ளது. இந்த 4.30 மணி நேர பயனத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால், 2 மணிக்கு அரைநாள் விடுப்பு எடுக்கும் நளினி, 2.30க்கு தானு, சிவராசன், சுபாவுடன் புறப்பிட்டிருந்தார் என்றால் கூட 7 மணிக்கு காஞ்சிபுரம் சென்றிருப்பார். அங்கிருந்து சம்பவ இடத்திற்கு 30 நிமிடம் என்று வைத்துக்கொண்டால் 7.30-க்கு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றிருப்பார். இந்த பொதுக்கூட்டம் 10 மணிக்கு துவங்க இருந்தது. மீதமிருந்த 2.30 மணி நேரத்தில் காங்., வேட்பாளர் மரகத சந்திரசேகருடனும், அவரது குடும்பத்தினருடனும் இவர்களுக்கு நெருக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. ஆக அவர்கள் குறிப்பிட்ட 7.30 மணிக்கு முன்பாகவே சம்பவ இடத்திற்கு சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் நளினியின் வாக்குமூலம் படி முருகனின் வீட்டிற்கு தான் சுபா, தாணு மற்றும் சிவராசன் ஆகியோர் 21.05.1991 அன்று மாலை 3 மணிக்கு வருகை தந்துள்ளனர். அடுத்ததாக நளினியின் வாக்குமூலம் படி, சிவராசன், நளினியை தனிமையில் 20ம் தேதி மாலை 6 மணிக்கு சந்தித்துள்ளார். ஆனால் பேரறிவாளனின் வாக்குமூலம் படி நளினி, சிவராசன், முருகன், ஹரிபாபு ஆகியோர் பாக்யநாதன் வீட்டில், பாக்யநாதன் முன்னிலையில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த இரண்டு வாக்குமூலத்தில் எது உண்மை ?

சரி அடுத்த விவகாரத்திற்குள் வருவோம். பேரறிவாளன், பாக்யநாதனுடன் இணைந்து 21ம் தேதி இரவு 9.30க்கு திரைப்படம் சென்றிருந்தார் என்று கூறப்படுகிறது. 21ம் தேதி இப்படி ஒரு சம்பவம் நடைபெற உள்ளது என்று பேரறிவாளன் தெரிந்துக்கொண்டிருந்தால், பதற்றத்துடன் தலைமறைவாக அல்லவா இருந்திருப்பார் ? எப்படி திரைப்படத்திற்கு ஆசுவாசமாக சென்று வருவார் ? அப்படியெனில் அவருக்கு இந்த விவகாரம் தெரியாது. தெரியாத ஒரு விவகாரத்திற்கு அவர் பேட்டரி வாங்கி கொடுத்துள்ளார் என்பதை எப்படி நீதிபதி, ராஜீவ் கொலைக்குதான் பேட்டரி வாங்கினார் என்று கூற முடியும் ? சிறப்பு புலனாய்வு குழுவினர் அவரிடம் பெற்ற வாக்குமூலத்தில் கூட அவர் யாருக்கு, எதற்காக பேட்டரி வாங்கினார் என்று கூறப்படவில்லையே ? சரி, 23ம் தேதி சிவராசன், பேரறிவாளனை சந்திக்கின்றார் என்றே வைத்துக்கொள்வோம். அவர்கள் 23ம் தேதி சந்தித்ததற்கான ஆதாரங்கள் எதுவுமே நீதிமன்றத்திடம் இல்லையே ? அடுத்ததாக அவர் சிபிஐ அதிகாரிகளால் மல்லிகை அலுவலகத்திற்கு ஜூன் 10-ம் தேதி பெரியார் திடலில் இருந்து அழைத்து செல்லப்பட்டது ஊர் அறிந்த உண்மை. இதை தி.க வினரே ஒப்புக்கொள்கின்றனர். இந்த சூழலில் 18-ம் தேதி அவர் தப்பிக்க முற்படும்போது சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார் என்று கூறுவது வாக்குமூலத்தின் பொய்யை தெளிவாக காட்டுகிறது.

ஆக, இவை எல்லாமே வாக்குமூலங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு இருப்பதையும், வாக்குமூலங்கள் பொய்யாக இருப்பதையும் தெளிவாக்குகின்றன. இது தண்டனை பெற்றவர்கள் எப்படி சிக்கவைக்கப்பட்டார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக்குகிறது.

இப்போது இந்த வழக்கின் மூன்றாவது முடிச்சு (குற்றவாளிகளாக கருதப்படும் நபர்களின் தொடர்பு) அவிழ்க்கப்பட்டுவிட்டது.

கேள்வி. 4. ராஜீவ் காந்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு எது ?

80 கிராம் கொண்ட C4 RDX கொண்ட 6 கிரனேட் வெடிகுண்டுகள், சில்வர் வயர்களால் ஒன்று சேர்க்கப்பட்டு இரண்டு 9 வால்ட் பேட்டரி மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டில் என்ன இருந்தது ? என்று தெரிவிக்கின்றோம். இது நாங்கள் ரகசியமாக, ஒரு முக்கிய சிபிஐ அதிகாரி மூலம் சேகரித்த தகவல். அந்த வெடிகுண்டில் C4 அல்லது Composition 4 என்று அழைக்கப்படக்கூடிய ப்ளாஸ்ட் கழிவுகள் கொண்ட மருந்து அடக்கப்பட்டிருந்துள்ளது. இதை PBX (PLASTIC BONDED EXPLOSIVES) என்று அழைப்பார்கள். இதை பயன்படுத்தினால், மிகப்பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்குமாம். உதாரனத்திற்கு கடுமையான சுவர்களை உடைக்க பல நாட்டு ராணுவங்கள் இந்த வெடி மருந்தை தான் பயன்படுத்துவார்களாம். இந்த வெடி மருந்து 90% அமெரிக்காவிலும், 7% சீனாவிலும், 3% ஆப்கான், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலும் தான் தயாரிக்கப்படுகிறது. இது இலங்கையில் இதுவரை தயாரிக்கப்பட்டதில்லை. இந்தியாவில் சில இடங்களில் இது தலையெடுக்க ஆரம்பித்த காலத்தில் மத்திய அரசு அதை தடுத்துள்ளதாகவும் கூறுகிறது. ஆனால் அது இந்தியாவிற்குள் வந்த காலத்திற்கும், வழக்கின் காலத்திற்கும் மிகவும் அப்பாற்பட்டு உள்ளது.

இந்த PBX (PLASTIC BONDED EXPLOSIVES)-ல் C3H6N6O6 என்று கூறப்படும் CYCLOTRIMETHYLENE - TRINITRAMINE (RDX) உள்ளது. இதில் வெடிக்கும் பொருளாக DI (2-ETHYLHEXYL) SEBACATE அடங்கியுள்ளது. இந்த DI (2-ETHYLHEXYL) SEBACATE-ல் 3-DIMETHYL-2, 3-DINITROBUTANE (DMDNB) அடங்கியுள்ளதால், இது வெடிபொருளாக பயன்படுகிறது என்கிறது வெடிபொருள் ஆராய்ச்சி மையம். இந்த சி-4-வால் நொடிக்கு 8,050 மீட்டர் தொலைவு வரை புகையை கொண்டு செல்ல முடியும் என்றும், இதன் உள்ளே இருக்கும் வெடிபொருளானது, வெடித்தால் பலரும் இறக்க நேரிடும் என்றும் வெடிபொருள் ஆராய்ச்சி மையம் கூறுகிறது.

இந்த வெடிபொருள் இரண்டு முறைகளை கொண்டதாகுமாம். அதாவது முதல் முறை என்பது சிறிய அளவிலான பாதிப்பை தான் கொடுக்குமாம். இந்த முதல் முறை என்பது புகையை மையப்பகுதியில் இருந்து வெளியிட்டு, வெடிபொருளை வெடிக்க வைக்குமாம். அவ்வாறு வெடித்தவுடன் மீண்டும் புகை காலியான பகுதிக்கு சென்று மறுபடியும் வெடிக்குமாம்.

இரண்டாவது முறை என்பது, அரை கிலோ கிராம் அளவிற்கோ அல்லது அதற்கும் குறைவாகவோ சி-4 பயன்படுத்தினால் சுமார் 20.3 மீட்டர் தூரத்திற்கு கடுமையான வெடி சத்தத்துடன், அதிக புகை அளவுடன் வெடுபொருள் வெடிக்குமாம். இதனால் கடுமையான உயிர்சேதம் ஏற்படுமாம்.

இதுபோன்ற சி-4 வெடிபொருட்கள் ராணுவத்திடம் மட்டும் உள்ளதாகவும், அது முதல்முறையாக ராஜீவ் படுகொலையில் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறுகிறது வெடிபொருள் ஆராய்ச்சி மையம்.

இந்த வெடி பொருளில் 91% RDX, 5.3% DI(2-ETHYHEXYL) SEBACATE, 2.1% POLYISOBUTYLENE மற்றும் 1.6% மோட்டர் ஆயில் பயன்படுத்தப்படுமாம். இந்த வெடிகளுக்கு முன்னோடி நாடு ஈரான் தான் என்கிறது வெடிபொருள் ஆராய்ச்சி மையம். இந்த தகவலை பிரத்யேகமாக உங்களுக்கு முதன் முதலாக எங்கள் நிறுவனம் வெளிக்கொண்டுவருகிறது. இதுவரை எந்த செய்தி மற்றும் பத்திரிக்கை நிறுவனங்களும் இதை தெரிவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, இது ராஜீவ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி 5. இந்த வெடிகுண்டு பல நாட்டு ராணுவங்கள் (இந்தியா உட்பட) மட்டுமே பயன்படுத்தும் வெடிபொருள் கொண்டது என்கிறபோது, இது எப்படி தாணுவின் கைகளுக்கு வந்தது ? இந்த பெல்ட் வெடிகுண்டை தயாரித்தவர் யார் ?

இந்த கேள்விக்கு பதில் வழக்கில் விசாரிக்கப்படாமலேயே இருந்துள்ளது. இந்த வகையிலான வெடிகுண்டு ஈரான் நாட்டு பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெடிகுண்டாகவே இருக்கும் என்று வெடிபொருள் ஆராய்ச்சி மையம் கூறுகிறது. கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை தெளிவாக சிறப்பு புலனாய்வு குழு ஆராய்ந்திருந்தால் சி4 வெடி பொருள் எங்கு தயாரிக்கப்படுகிறது. எங்கிருந்து எங்கு செல்கிறது என்பதெல்லாம் தெரிந்திருக்கும்.

சி4 தயாரிப்பு என்பது ஈரான் நாட்டில் தயாரிக்கப்படுகிறது. இந்த சி4 வெடி பொருள் ஈரானில் தயாரிக்கப்பட்டு, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, சீனாவில் இருந்து இந்தியா, அமெரிக்கா உட்பட 65 நாடுகளுக்கு அனுப்பப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

1994-ம் ஆண்டு வரை, ஈரானில் இருந்து சீனாவிற்கும், ரஷ்யாவிற்கும் இந்த வெடிபொருள் ஏற்றமதி செய்யப்பட்டுள்ளது. பின் ரஷ்யாவில் இருந்து, அமெரிக்க ராணுவம், ரஷ்ய ராணுவம், பிரான்ஸ் ராணுவம் என்று பிரித்து எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதே போல சீனாவில் இருந்து, ஆஸ்திரேலியா ராணுவம், ஆப்கானிஸ்தான் ராணுவம் மற்றும் இலங்கை ராணுவம் பிரித்து எடுத்துக்கொண்டன. ராணுவத்திடமிருந்து, ராணுவத்தினர் பயன்படுத்தும் வெடிபொருளானது, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சருக்கு தெரியாமல் எப்படி பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் ? அப்படியே திருடப்பட்டிருந்தால் கூட, அது சம்பந்தமாக ஏன் இதுநாள் வரை விசாரனை நடத்தவில்லை ?

இந்தியாவிற்கு, இலங்கையில் இருந்து இந்த வெடிபொருளை எடுத்துச்செல்ல இலங்கை கடலோர காவல்படை விடுவதில்லை. மறைமுகமாக எடுத்து வந்தால் கூட, இலங்கை ராணுவத்தினரிடம் உதவி வாங்காமல் இந்த வெடிபொருள் கொடுக்கப்பட்டிருக்காது. இலங்கை ராணுவம் இந்த வெடிபொருளை, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விடுதலை புலிகளிடம் ஒப்படைக்காது. அப்படி ஒப்படைக்குமேயானால், 2009-ல் கொடூர படுகொலைகளை இலங்கை ராணுவம் நிகழ்த்தியிருக்காது. ஆக, இலங்கை ராணுவம் கொடுக்கவில்லை. இலங்கை ராணுவம் கொடுக்கவில்லை என்றால், இந்திய ராணுவம் சார்பில் அமைச்சக தரப்பிலிருந்து யாரோ உதவியிருக்கவேண்டும். இந்த வெடிபொருளை தயாரிப்பது அவ்வளவு சுலபம் அல்ல என்கிறது வெடிபொருள் ஆராய்ச்சி மையம்.

ஆக, வெடிபொருள் கொடுக்கப்பட்டதில் இந்திய அரசின் மத்திய உள்துறை அமைச்சகத்தை சேர்ந்தவர்களுக்கு நிச்சயம் தொடர்பு உள்ளது.

சரி, இந்த வெடிகுண்டை தயாரித்தவர் யார் ? இந்த கேள்வி, மிக மிக முக்கியமான கேள்வி. இந்த வெடிகுண்டு 2ம் வகையை சேர்ந்தது. 80 கிராம் சி4 வெடிபொருட்கள் அடங்கிய 6 கிரனேட், சில்வர் வயரால் இணைக்கப்பட்டு, பின் 9 வால்ட் பேட்டரி மூலம் வெடிக்க தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டை தயாரித்தவர் யார் என்ற விபரம் இல்லை. இதை சிறப்பு புலனாய்வு குழுவே கூறுகிறது. வெடிகுண்டை தயாரித்தவர் யார் என்று தெரியவில்லை என்கிற போதும் கூட, வெடிபொருள் கொடுக்கப்பட்டத்தில் உள்ள சில சூட்சமங்களை உங்களுக்கு விளக்கியுள்ளோம் என்பதில் எங்களுக்கு மன நிம்மதி. இந்த சூட்சமங்களை தெரிவிக்கக்கூடாது என்று தான் 2 முறை அழைக்கப்பட்டு, மிரட்டப்பட்டோம்.

கேள்வி 6. ராஜீவ் காந்திக்கு எங்கிருந்தெல்லாம் அச்சுறுத்தல் இருந்தது ?

ஜனவரி 1985 - நியூயார்க் நகரத்தில் உள்ள சீக்கியர்கள் போட்ட திட்டம் மற்றும் தொடர் சீக்கியர்கள் அச்சுறுத்தல்கள்.

ராஜீவ் காந்தியை கொலை செய்ய அறுபதாயிரம் டாலர் வரை செலவு செய்ய இவர்களின் அமைப்பு தயாராக இருந்தது.

இவர்களின் அச்சுறுதல்களுக்கு காரணம் சீக்கியர்கள் மீதும், பொற்கோவில் மீதும் 1984-ம் ஆண்டு நடந்த தாக்குதல். சீக்கிய பிரிவினைவாதிகள் என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அடையாளம் காணப்பட்ட, அதாவது சீக்கியர்களுக்கென்று தனியாக ஒரு மாநிலத்தை உருவாக்கி கொடுங்கள் என்று காலிஸ்தான் மூவ்மென்ட்-னை துவக்கிய காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலா மற்றும் அவரது குழுவினர் பதுக்கியுள்ள ஆயுதங்களை கைப்பற்றவும், அவர்களை கைது செய்யவும் இந்திய ராணுவத்தை அப்போதைய மத்திய அரசு முயற்ச்சிகளை மேற்கொண்டது. இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 1,500 பேர் பலியாகினர். 10 பேரை பிடிக்க போய் 1490 பேரை பலி கொடுத்தது அப்போதைய இந்திய அரசு. இதை இந்தியா டுடே அமைப்பு ''அரசியல் அவமானங்கள்'' என்ற தலைப்பில் டாப் 10 இந்திய அரசியல் அவமானங்களை பட்டியலிட்டு, அதில் முதல் அவமானமாக இதை சேர்த்தது.

இந்த நடவடிக்கைக்கு பின்னர், இந்திரா காந்தி கொல்லப்பட்டார். இந்த நிகழ்வு நடந்தது ஜூன் மாதம். இந்திரா காந்தி கொல்லப்பட்டது அக்டோபர் மாதம். வெறும் 4 மாத காலம் தான் வித்தியாசம். இந்திரா காந்தி தன் மெய்காப்பாளர்களான சீக்கியர்கள் இருவரால் சுட்டுக்கொள்ளப்பட்டார். இந்த சம்பவம் நடக்கும்போது ராஜீவ் காந்தி மேற்குவங்கத்தில் காங்., கட்சிக்காக பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தார்.

இந்திரா காந்தியை, சீக்கியர்கள் தான் கொன்றார்கள் என்று தெரிந்தவுடன், காங்., கட்சியினர் சும்மா இருந்தார்களா ? அவர்கள் தங்கள் பங்கிற்கு 3000-க்கும் அதிகமான சீக்கியர்களை நவம்பர் 1ம் தேதி முதல் அடித்து, உதைத்து, சித்திரவதை செய்து கொன்றனர். இந்த சீக்கியர்கள் மீதான நடவடிக்கை குறித்து பிபிசி ஒரு தனி டாக்குமென்ட்ரி படத்தையே உருவாக்கி வெளியிட்டுள்ளது.

சீக்கியர்கள் மீதான தொடர் தாக்குதல்கள், ராஜீவ் காந்திக்கும் அச்சுறுதல்களை கொடுத்தது. ராஜீவ் காந்தி, சீக்கியர்கள் மீதான தாக்குதலை, அரசு தரப்பில் இருந்து நியாயப்படுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அது அவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்திட, அதனால் குருபிரதாப் சிங், பிர்க், லால் சிங், லால் சிங், சுக்விந்தர் சிங், விரேந்தர் சிங், ஜஸ்பிர் சிங் சந்த், ஜிதேந்தர் சிங் உட்பட சிலரால் இந்தியாவில் இருந்து திட்டம் தீட்ட முடியாது என்ற முடிவில், அமெரிவிக்காவில் இருந்து திட்டம் தீட்டி ராஜீவ் காந்தியை கொலை செய்ய முயற்ச்சிகளை மேற்கொண்டிருந்தனர். நாங்கள் முன்னர் குறிப்பிட்டது போல அமெரிக்காவில், அந்நாட்டு அரசால் கைதான இவர்கள் ராஜீவை கொல்ல பயன்படுத்திய வெடி பொருள் சி4 வெடிபொருள் தான். அங்கிருந்து அதை இந்தியாவிற்குள் உள்ள தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு இதை அனுப்ப அவர்கள் முயன்றிருந்தார்கள். அமெரிக்க அரசு விசாரனை நடத்திக்கொண்டிருக்கும்போதே லால் சிங், போலி பாஸ்போர்ட் மூலம் கனடாவிற்கு சென்று, அங்கிருந்து பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ் அமைப்பில் இணைந்துவிட்டார். பின் ஜூலை 16, 1992-ல் இவர் ஐஎஸ் அமைப்பின் சார்பில் இந்தியா வந்ததாக மும்பையில் இந்திய காவலர்களால் கைது செய்யப்பட்டார்.

சி-4 பயன்பாடு ராஜீவ் விவகாரத்தில் எங்கு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது என்பதை இப்போது நீங்கள் புரிந்துக்கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

அதன் பிறகு காலிஸ்தான் அமைப்பு ராஜீவ் காந்தியை கொல்ல பல சதி திட்டங்களை தீட்டி வந்தது. இது FBI அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது. ராஜீவ் காந்தி, அக்டோபர் 14, 1985-ம் ஆண்டு, இந்திய பிரதமராக இங்கிலாந்திற்கு சென்றபோது, ஜிந்தா என்பவரின் தலைமையில் அந்த அமைப்பு முயன்றுள்ளது.

அதன் பின் அக்டோபர் 2, 1986-ல் காந்தியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராஜீவ் காந்தியை கொல்ல, கர்மஜித் சிங் என்ற சீக்கிய இளைஞர் ஒருவர் முயன்றுள்ளார். அவரிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.

இது எல்லாவற்றையும் தாண்டி, 1991-ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி, இரு சீக்கிய இளைஞர்கள் ராஜீவ் காந்தியின் டெல்லி மற்றும் பரிதாபாத் பிரச்சாரங்களில் பங்கேற்று, அவரை கொலை செய்ய திட்டங்கள் தீட்டுவதற்கான பணியை துவக்கியிருந்தனர். இது ராஜீவ் கொலை செய்யப்பட்ட 21ம் தேதிக்கு 6 தினங்கள் முன்பு..

இந்த பிரச்சார பங்கேற்புக்கு முன், இக்பால் சிங் பௌஜி என்ற காலிஸ்தான் படையை சேர்ந்த துனை தலைவர் அந்த அமைப்பினர் சிலரை சந்தித்து, ராஜீவ் கொலைக்கு பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளார். இந்த திட்டத்தின் படி டெல்லி பிரச்சாரத்தில் முதலில் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை ஹர்ப்ரீத் சிங் ராங்கி மற்றும் குருதேவ் சிங் பாப்பி செயல்படுத்தவேண்டும் என்பதே அத்திட்டம். ஆனால் அதை அங்கு அவர்களால் செயல்படுத்த இயலவில்லை. இந்நிலையில் சரப்ஜித் சிங் வீட்டில் அவர்கள் தங்கி, பரிதாபாத் பிரச்சாரத்தில் மீண்டு அவரை கொல்ல முயன்றுள்ளனர். அதாவது சுக்பீர் சிங் பூக்களை அங்குள்ள காங்., கட்சியினருக்கு வழங்கி, அவர்களை தூவ வைக்கும்போது, குருதேவ் சிங் பாப்பி மற்றும் இக்பால் சிங் பௌஜி ஆகியோர் வெடிகுண்டுகளை தூக்கி வீசி ராஜீவ் காந்தியை கொலை செய்யவேண்டும் என்று முயன்றுள்ளனர். ஆனால் காவல்துறை கடுமையாக பூக்களை காங்., கட்சியினருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களின் திட்டம் கைவிடப்பட்டது. இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட விரும்புகிறோம். இதே மாதிரியான திட்டம் தான் ஸ்ரீபெரம்புதூர் கூட்டத்திலும் நடந்தது என்பதை யாரும் மறக்கவேண்டாம். ராஜீவ் காந்தியை வரவேற்க பூக்கள் தூவப்பட்ட நிலையில், மாலை அணிவிக்க முயன்ற தாணு அவரை கொன்றார் என்கிறது சிறப்பு புலனாய்வு குழு. ஸ்ரீபெரம்புதூர் கூட்டம் திட்டமிடப்படாத கூட்டம். காவல்துறை பாதுகாப்பும் குறைவாக இருந்த கூட்டம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த தாக்குதல் குறித்து எந்த இந்திய விசாரனை அமைப்புமே ராஜீவ் காந்திக்கு அறிவுருத்தாத நிலையில், யாசர் அராபத் பாலஸ்தீனத்தில் இருந்து ஏப்ரல் மாதம் ராஜீவ் காந்திக்கு சீக்கிய அமைப்பால் ஆபத்து உண்டு என்பதையும், தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர்களால் ராஜீவ் கொலை செய்யப்படும் வாய்ப்பு 99% உள்ளது என்றும் நேரடி கடிதம் மூலம் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் இந்திய அரசு, ராஜீவ் காந்திக்கு போதுமான பாதுகாப்புகளை அளிக்க மறுத்துள்ளது.