விசாரனை தொகுப்புகள்

குற்றவாளிகள் எப்படி பிடிபட்டார்கள் என்று தெரியுமா ? இல்லை, இல்லை... வலுக்கட்டாயமாக எப்படி பிடிக்கப்பட்டார்கள் என்று தெரியுமா ? இதோ, அந்த தகவலையும் நாங்கள் உங்களுக்கு தருகிறோம்.

மே மாதம் இறுதியில் சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அந்த விசாரனையின் முதல் கட்டமாக ஜூன் 10ம் தேதி, மாலை 5 மணிக்கு திராவிட கட்சியினரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் வலுக்கட்டாயமாக சோதனை நடத்தியிருக்கின்றனர். அந்த சோதனை முடிந்த அடுத்த சில மணி நேரத்தில் சரியாக இரவு 10 மணிக்கு, பேரறிவாளனின் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்று, பேரறிவாளனிடம் விசாரனை நடத்தவேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு அவரின் தந்தையோ, பேரறிவாளன் தி.கவின் பெரியார் திடலில் தங்கியிருப்பதாக கூறி, அவர்களை உள்ளே அழைத்து பேச ஆரம்பித்துள்ளார். அப்போது அங்கு டிவி மேல் வைக்கப்பட்டிருந்த பிரபாகரனின் புகைப்படத்தினை பார்த்துவிட்டு, இரண்டு நாட்களுக்குள் பேரறிவாளனை மல்லிகை அலுவலகத்திற்கு அழைத்து வரவேண்டும் என்றும், அவரிடம் கேள்வி கேட்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து பேரறிவாளனின் பெற்றோர்கள் நாளையே அவரை அழைத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்கள். மறுநாள் காலை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், பேரறிவாளனை காண பெரியார் திடலுக்கு வந்துள்ளார். ஆனால் பேரறிவாளன் வேலை ஒன்று காரணமாக வெளியே சென்றிருந்தார். மாலை அவர் வந்ததும், அவரை அழைத்துக்கொண்டு கடைக்கு சென்று, செல்லும் வழியில் நடந்ததை விவரித்து கூறியிருக்கிறார் அற்புதம்மாள். பேரறிவாளனோ, ''நாளையே நாம் அங்கு செல்வோம். அவர்கள் என்னிடம் விசாரனை நடத்தட்டும்'' என்று கூறியிருக்கிறார்.

இது எல்லாம் ஒருகட்டம் நடந்துக்கொண்டிருக்க, மறுபுறம் ஊரில் பேரறிவாளனின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. சோதனையின் முடிவில் பேரறிவாளனின் தந்தை, காவல்துறையினரால் அழைத்து வரப்பட்டு, பேரறிவாளனை அடையாளம் காட்டினார். சிறப்பு புலனாய்வு அமைப்பு கடைக்கு சென்று திரும்பிய பேரறிவாளனை, தாயிடம் கெஞ்சி, போராடி விசாரனை என்ற பெயரில் கூட்டிச்சென்றது. ஆனால் 20-ம் தேதி, பேரறிவாளன் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் பெரியார் திடலில் சுற்றி வலைத்து கைது செய்யப்பட்டார் என்று செய்தி வெளியிட்டது விசாரனை அமைப்பு. 11ம் தேதி கைதான பேரறிவாளன், 20-ம் தேதி தான் வெளிப்படையாக கைது செய்யப்பட்டார் என்றே தகவல் கொடுக்கப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, சிறப்பு புலனாய்வு பிரிவினர், அதே 10ம் தேதி பாக்யநாதன், பத்மநாபன் என்று இருவரை வேறு கோணத்தில் கைது செய்தது. நிலமை இப்படிச்சென்றுக்கொண்டிருக்க ஜூன் 14ம் தேதி நளினியை பெண் என்று கூட பார்க்காமல் அடித்து, துண்புருத்தி கைது செய்தது சிறப்பு புலனாய்வு அமைப்பு. இது எல்லாம் போதாது என்று நளினியை விடவேண்டும் என்றால் முருகன் கைது செய்யப்படவேண்டும் என்று மிரட்டி, முருகனை கைது செய்தது சிறப்பு புலனாய்வு பிரிவு. இந்நிலையில் சிவராசன், சுபா உட்பட சிலர் டேங்கர் லாரி மூலம் பெங்களூரு சென்றனர் என்று தகவல் கிடைத்தவுடன், அதை பற்றி விசாரிக்காமல், தாமதப்படுத்தி பின் விசாரனையை துவக்கியது சிறப்பு புலனாய்வு அமைப்பு.

இந்த தாமதம் தப்பிச்சென்றதாக கூறப்பட்டவர்களின் உயிரை பறித்துவிட்டது. உயிரிழந்தவர்களுக்கு வீடு கொடுத்ததாக ரங்கன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் அளித்த வாக்குமூலமான ''சிவராசன், என்னிடம் சந்திராசாமி தன்னை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளார்'' என்று கூறியவை நீக்கப்பட்டன. மேலும் விசாரனை அதிகாரியால் அவர் இந்த வாக்குமூலத்திற்காக மிரட்டப்பட்டுள்ளார்.

இப்படி கைது செய்யப்பட்டவர்களிடம் அடித்து, துன்புருத்தி காவல்துறை விசாரனை வளையத்திற்குள்ளே இருக்கும்போதே மிரட்டப்பட்டு வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது.

இப்படித்தான் குற்றவாளிகள், இல்லை இல்லை குற்றத்தை ஒப்புக்கொள்ளும் படி வற்புருத்தப்பட்டவர்கள் கைதானார்கள். இந்த வழக்கை சம்பந்தமே இல்லாத தடா சட்டத்தில் பதிந்து 1 வருட விசாரனைக்கு பின் மே 20, 1992-ல் குற்றப்பத்திரிக்கையையும், ஆவனங்களையும், வாக்குமூலங்களோடு நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு அமைப்பு சமர்பித்தது. இந்த ஆவனங்கள், மிரட்டப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் வழக்கிற்கே பொருந்தாத தடா சட்டத்தை ஏற்று குற்றம் சுமத்தப்பட்ட 41 பேரில் இறந்துப்போன 12 பேர், இலங்கையில் உள்ள 3 பேர் என்று மொத்தம் 15 பேர் போக போக 26 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தடா நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சித்திக் மே 5, 1993--ல் விசாரனையை துவக்கினார். சிறப்பு புலனாய்வு குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஆவனங்கள் பரிசீலிக்கப்பட்டன. 1994-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி சாட்சிகளிடம் வாக்குமூலம் கேட்கப்பட்டு, அவை கேமராவில் பதிவேற்றப்பட்டது. திடீரென நீதிபதி சித்திக் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. விசாரனை முழுமையாக முடிவதற்கு முன்பே மே 29, 1994ம் ஆண்டு பிரபாகரன், பொட்டு அம்மன், அகிலா ஆகிய மூவரும் குற்றவாளிகள் என்று இடைக்கால தீர்ப்பு ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியளித்தார். இதற்கு நடுவில் சித்திக் ஓய்வு பெற, வழக்கு விசாரனை நீதிபதியாக வ.நவநீதம் பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் 288 சாட்சிகளிடமும் மறு விசாரனை நடத்தினார். ஆகஸ்ட் 11, 1997ம் ஆண்டு அரசு தரப்பு வாதங்களை முடித்தவுடன், இருதரப்பு எழுத்துப்பூர்வமான வாதங்களை நீதிபதி பெற்றுக்கொண்டார். இந்த சூழலில் மீண்டும் சாட்சிகளிடம் கேமரா முன்பு வாக்குமூலம் பெற்றுக்கொண்ட நீதிபதி நவநீதம், திடீரென தடாலடியாக பத்மநாபன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள 17 பேரில் 15 பேரை ஆதாரங்கள் அவர்களுக்கு எதிராக இருந்த போதிலும் விடுவித்தார். இந்த தீர்ப்பு பின் ஜன. 28, 1998-ம் ஆண்டு நீதிபதி நவநீதம் அவர்கள் 1600 பக்கங்கள் கொண்ட ராஜீவ் கொலை வழக்கிற்கான தீர்ப்பினை அறிவித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை விதித்தார்.

இதில் சிக்கல் என்னவென்றால், இந்த வழக்கை பற்றி ஆராய்ந்து வந்த ஜெயின் கமிஷன் தனது இடைக்கால அறிக்கையை இந்த தடா நீதிமன்ற தீர்ப்பு வந்த பின், 2 மாதங்களுக்கு பிறகு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. அதில், இந்த படுகொலையில் திமுக தலைவர் கருணாநிதி, பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, பிரபல சாமியார் என்ற பெயரில் உள்ள வித்தகர் சந்திராசாமி, ஆயுத கடத்தல் மன்னன் அட்னன் கஷ்யோகி, தமிழக காங்., அப்போதைய தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, ஆயுத விற்பனையாளர் எர்னிமில்லர் ஆகியோர் இந்த படுகொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

நாங்கள் ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையை பரிசீலித்த அதே வேளையில், இறுதி அறிக்கையையும் பரிசீலித்தோம். அது பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து கொடுக்கப்படும்.

இப்படியெல்லாம் விசாரனை நடந்துக்கொண்டிருக்க, உச்சநீதிமன்றம் ஒரு வினோத தீர்ப்பை, இந்தியாவே பார்த்து வியக்கும் வண்ணம் அளித்தது. இந்த வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என்று கூறியது. அதேவேளையில் தடா சட்டத்தின் படி பெறப்பட்டுள்ள வாக்குமூலங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறியதுதான் அந்த வினோதம். இந்திய சட்ட திட்டங்கள் படி ஒரு சட்டம், ஒரு வழக்கின் விசாரனைக்கு பொருந்தாதது என்றால், அந்த சட்டத்தின் படி பெறப்பட்டு, பதியப்பட்ட வாக்குமூலமும் வழக்கிற்கு பொருந்தாது என்பது தான் உண்மை. ஆனால் உச்சநீதிமன்றம் அதை மாற்றி அமைத்தது என்று தான் கூறவேண்டும். தடா சட்டம் பொருந்தாது. ஆனால் தடா சட்டத்தின் படி பெறப்பட்ட வாக்குமூலம் வழக்கிற்கு பொருந்துமாம்.

சரி இதையெல்லாம் பற்றி சொல்லும்போது ஜெயின் கமிஷனை விசாரிக்க விடாமல் காங்., கட்சியை சேர்ந்த சிலரே சதி செய்ததை எல்லாம் சொல்லாமல் இருப்போமா என்ன ? இந்த வழக்கை மிக நுணுக்கமாக ஜெயின் கமிஷன் விசாரிக்க துவங்கிய கட்டத்தில் உச்சநீதிமன்றத்தில் கமிஷன் 1989க்கும் பின் காலவரையறுக்கப்பட்ட காலத்திற்குட்பட்டு தான் விசாரனை நடத்தவேண்டும் என்று ஒரு வழக்கு பதிவானது. பிறகு அந்த வழக்கு தள்ளுபடியானது. பின் மற்றொரு வழக்காக, இந்த வழக்கு குறித்த எந்த விசாரனையையும் மேற்கொள்ள கமிஷனுக்கு உரிமை இல்லை என்று ஒரு மனு தாக்கலானது. பிறகு அதுவும் தள்ளுபடியானது. ஒரு கட்டத்தில் தமிழ்நாடு காங்., கமிட்டி சார்பில் கமிஷனிடமே கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது. அதாவது 1987-ம் ஆண்டுக்கு பின் நடந்த சம்பவங்களை மட்டுமே கமிஷன் விசாரிக்கவேண்டும் என்றும், சிறப்பு புலனாய்வு குழு விசாரித்ததை ஆய்வுக்குட்படுத்தக்கூடாது என்றும் அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டது. இதுவும் உச்சநீதிமன்றம் வரை சென்று பின் தள்ளுபடியானது. இப்படி கமிஷன் விசாரனைக்கு நிறைய தடைகள் கொடுக்கப்பட்டன. இந்த தடைகளை தாண்டி கமிஷன் விசாரிக்க துவங்கிவிட்டது என்றதும், சில குற்றவாளிகளை மறைக்க, ஜெயின் கமிஷன் கேட்ட வர்மா கமிஷன் ஆய்வறிக்கை தொடர்பான ஆவனங்கள் தொலைந்துவிட்டதாக மத்திய அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டது. முதல் கட்ட விசாரனையில் தேடுகிறோம், அவகாசம் தேவை என்றார்கள். இரண்டாம் கட்ட விசாரனையிலும் அதையே தெரிவித்தார்கள். மூன்றாம் கட்ட விசாரனையிலோ, ஆவனங்கள் எங்குள்ளது என்று தெரியவில்லை. பிரதமர் அலுவலகத்தில் சில ஆவனங்கள் இருந்துள்ளன. அதை கேட்டு வருகிறோம். தொலைந்த ஆவனங்களை மீண்டும் உருவாக்க கமிஷன் அனுமதி அளிக்கவேண்டும் என்று கூறி அமைச்சகம் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு வேறு வழியின்றி ஏற்கப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்டது. அதன் படி,

(1 ) Extracts of Notesheets of File No.l/12014/5/ 91-IS(DeI1I), consisting of note dated 26.6.91 of Shri Ashok Bhatia, Joint Secretary, Ministry of Home Affairs, note dated 26.5.1991 of Shri R.K. Bhargava, Home Secretary, note dated 28.6.1991 of Union Home Minister and endorsement dated 3.7.1991 by the Prime Minister's office.

( 2 ) Minutes of the meeting of the Cabinet held at 4.00 A.M on Wednesday, the 22nd May, 1991, at 7, Race Course Road, New Delhi (Ex .297).

(3) Letter No.L-19Oll/ll/9l-Jus. Dated 27.5.199l from Ministry of Law & Justice (Department of Justice) addressed to Joint Secretary (IS), Ministry of Home Affairs, regarding appointment of Shri Justice J.S. Verma Judge, Supreme Court of India, as Commission of Inquiry.

(4) Ministry of Home Affairs' Notification No.S.0.356tE) dated 27.5.1991 regarding appointment of Commission of Inquiry headed by Shri Justice J.S. Verma.

(5) Letter dated 2nd June, 1991 from Shri P.V. Narasimha Rao, President, A11 India Congress Committee(I) to Shri Chander Shekhar, Prime Minister, with a revised draft of the terms of reference.

(6) DO letter No.G-3634/HS/91 dated 4.6.1991from Shri R.R. Bhargava, Secretary to govt of India, Ministry of Home Affairs to Shri Justice J.S Verma, Judge, Supreme Court of India .

(7) Letter dated 8.6.1991 from Shri Justice J.S. Verma, Judge, Supreme Court of India to Shri R.K. Bhargava, Secretary, Ministry of Home Affairs.

(8) Letter dated 29.6.1991 from Shri P.V Narasimha Rao, Prime Minister of India to Shri Ranganath Misra, Chief Justice of India.

ஆகிய ஆவனங்கள் மீண்டும் உருவாக்கப்பட்டு சமர்பிக்கப்பட்டன.

© 2017 TNSPIMT, Chetpet, Chennai.
Powered by Webnode
Create your website for free! This website was made with Webnode. Create your own for free today! Get started